FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: PraBa on March 10, 2016, 08:45:11 PM

Title: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,
Post by: PraBa on March 10, 2016, 08:45:11 PM
படித்ததில் படித்தது
விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..
கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..
அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..
இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..
அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.
அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள்,
அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..
ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..
ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..
மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.
தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..
இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..
நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,
ஆம்..நண்பர்களே..,
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.
ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.
அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்
எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.
Title: Re: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,
Post by: SarithaN on December 19, 2016, 01:31:22 AM
நண்பர் பிரபா வணக்கம்,

யாரையும் குறவாக எண்ணக்கூடாது, கல்வியை
சரியாகவும் தெளிவாகவும் கற்றவர்கள் யாவருமே
கற்றதம் நெறியில் வாழ்வது இல்லை,

பலரது கல்வி அவரவர் கற்ற துறையில் நிலைபெற
செய்யும், சமூக வாழ்க்கையில்  பல கல்விமான்கள்
தோற்று போகின்றனர், கல்வி அறிவு அற்றபோதும்
சமூகத்தோடு ஒட்டி ஒழுகுபவன் சிறந்த அறிஞனே.

நமது கிராமங்களில் இப்படியான பட்டறிவுகொண்ட
விவேகிகள் நிறைந்தே கிடக்கின்றனர்!.

அழகான பதிவு நண்பரே, வாழ்க வளமுடன்.
நன்றி