FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on January 15, 2012, 05:19:01 PM
-
நான் ரசித்து!
நல்லவர்கள் போர்வையில்
தீயவர்களின் ஆட்டம்
நல்லவைகளைக் கூட
கெட்டவைகளாக்கும்
சுயநலத்தின் பார்வையில்
வசதியுள்ளோரின் நட்பு
தூய்மையின் சின்னம்
வசதியற்றோரின் நட்பு
அசிங்கத்தின் அங்கம்
தாயிமைக்கு ஈடாகும் நட்பையும்
தரம் பிரித்து தவறாக்கிப் பேசும்
துன்பப்படும்போது என்னெவென்று
கேட்காத உறவுகள்
தோள்கொடுப்போரையும் சேர்த்து
தூற்றிப் பேசும்போது
உள்ளம் உருத்தாத சுயநலவா[வியா]திகள்
கெட்டவர்களெல்லாம்
நல்லவர்களாகிறார்கள்
இது நாகரிக காலத்தின் சாபம்
நல்லவர்கள்கூட
கெட்டவர்களாக்கப் படுகிறார்கள்
இதுதான் நல்லவர்களுக்கு
கிடைக்கப்படும் லாபம்
படைத்தவனுக்கு பயந்தவர்
கைவிடப்படுவதில்லை
படைப்பினங்களுக்கு பயப்படவேண்டிய
கட்டாயமில்லை
தூற்றியவர்கள் ஒருநாள்
போற்றும் பொற்காலம் வரும்
அப்போது
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
-
துன்பப்படும்போது என்னெவென்று
கேட்காத உறவுகள்
தோள்கொடுப்போரையும் சேர்த்து
தூற்றிப் பேசும்போது
உள்ளம் உருத்தாத சுயநலவா[வியா]திகள்
Nala varigal
NIce poem usf
-
எனக்காகவே விசேஷமாய் வரையப்பட்ட வரிகளோ என எண்ண தோன்றியது ....
-
நன்றி ரெமோ & அஜித்!
-
தூற்றியது மன்னிக்கபடும்
ஆனால் மறக்கப்படுவதில்லை...
ஆம் மன்னிக்க படும் மறக்கபடுவதில்லை .,.... நிஜமான வரிகள் :)