FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 10, 2016, 01:40:11 PM

Title: ~ தள தள தக்காளி தோசை ~
Post by: MysteRy on March 10, 2016, 01:40:11 PM
தள தள தக்காளி தோசை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fthal.jpg&hash=2444a4b9aa6ce97f98c03951b4c105c2791fbbaf)

புழுங்கல் அரிசி (அ) இட்லி அரிசி – இரண்டு டம்ளர்
பச்சரிசி – அரை டம்ளர்
காய்ந்த மிளகாய் – ஆறு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் – ஒன்று
பூண்டு – நான்கு பற்கள்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் – இரண்டு மேசைக்கரண்டி
தயிர் – ஒரு கப்
உப்பு – மாவு கலக்க தேவையான அளவு
சின்ன வெங்காயம் – பத்து
தக்காளி – நான்கு
எண்ணெய் + நெய் – தோசை சுட தேவையான அளவு

அரிசிவகைகளை களைந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
தக்காளியை நான்காக நறுக்கி மிக்ஸியில் லேசாக கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், வெங்காயத்தையும் கொர கொரப்பாக திரித்து கொள்ளவும்.
இப்போது ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு அதனுடன் தக்காளி கலவை, கொர கொரப்பாக திரித்தது அனைத்தையும் போட்டு நன்கு ஆட்டவும், தேங்காய் துருவலையும் சேர்த்து ஆட்டவும்.
நல்லா எல்லா கலவையும் சேர்ந்து மையாக அரைந்ததும் அதில் தயிர், உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
ரொம்ப புளிக்க தேவையில்லை காலையில் அரைத்து இரவு டிபனுக்கு சுடலாம்.
மொறுகளாகவோ அல்லது தடிமனாகவோ அவரவர் விருப்பபடி சுட்டு சாப்பிடவும்.
இந்த தோசையில் பல சத்துள்ள பொருட்கள் சேருகிறது. வாரம் ஒரு முறை செய்து சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு ரொம்ப நல்லது, குழந்தைகளுக்கும் ஒரு சத்தான தோசை. தொட்டு கொள்ள மிளகாய் பொடி, பொட்டுகடலைக் துவையல், மட்டன் (அ) இறால் தொக்கு. ஏன் சும்மா சர்க்கரை(அ) வெல்லம் தொட்டு சாப்பிடலாம்