FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on January 15, 2012, 04:48:01 PM

Title: தலித் மக்களும் சமூக விடுதலையும்!
Post by: Yousuf on January 15, 2012, 04:48:01 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-F0cpXprZ7fk%2FTfvsCEjOfVI%2FAAAAAAAAF4U%2FwSzhHzrYrXE%2Fs200%2Funtitled.bmp&hash=5ebaf22deb2015850bc94c35ef402596987fbc75)

தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் மதம் மாறுவதையும்,  இட ஒதுக்கீட்டையும் இணைத்து இந்துமத பயங்கரவாத இயக்கங்கள் அடிக்கடி கூக்குரல் இடுவதை கேட்டிருப்பீர்கள்.

அதாவது, பணம், பால் பவுடர், வளைகுடா வேலை என்று பொருள் உலக ஆசை காட்டி மதம் மாற்றப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். யின் கோரிக்கை.

ஆனால், இவர்கள் இடஒதுக்கீடு என்ற உலக ஆசையைக் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களை இந்து மதத்திலேயே இருங்கள், மதம் மாறாதீர்கள் என்று கேட்பது அதைவிட கொடுமை.

”இந்து மதத்தின் சாதி, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து உங்களுக்கு விடுதலை தருகின்றோம் ஆகவே நீங்கள் மதம் மாறாதீர்கள்” என்று இவர்களால் சொல்ல முடியுமா? அதற்கு இவர்களது மநுதர்மாம்தான் சம்மதிக்குமா!

மொத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் "இங்கேயே அடிமைகளாக இருங்கள்," அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள்.

ஆன்மீகத்தினால், சமாதானத்தினால் அல்ல ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கிரிமினல் மிரட்டல்கள் மூலமாக தலித் மக்களுக்கு சமூக விடுதலையை கிடைக்கவிடாமல் தடுக்கிறார்கள்.

மேலும் தலித் மக்கள் எதாவது உலக லாபத்தை கருதியோ அல்லது தாங்களாக விரும்பியோ, வேறு மதத்திற்கு மாற விரும்பினால் அதை இடஒதுக்கீட்டை காரணம் காட்டி தடுத்து வருகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஹிந்துமதத்தின் பெயரால் இந்தியாவில் அனுபவிக்கும்  கொடுமைகள் போதும், மற்ற மதத்தில் அவர்கள் நிம்மதியாக வாழமுடியும் என்று அவர்கள் கருதினால் செல்லட்டும் அது அவர்கள் உரிமை.

இந்தியாவின் சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரே இந்து மதத்தில் தொடர்ந்து இருந்தால் ஜாதி பிடியில் இருந்து மீள முடியாது என்று உணர்ந்து புத்த மதத்திற்கு மாறினார்.

தலித் மக்கள் முஸ்லிமாக மாறி ஜாதியை  தொலைத்து "பாய்" என்று அழைக்கப்படுவதை இப்போதும் பார்க்க முடிகிறது. அப்படியாவது அவர்களை பிடித்த ஜாதி என்கிற பேய் ஒழியட்டுமே!

இந்த பார்பனர்களால் இவர்களுக்கு நன்மைதான் செய்யமுடியாது, மதம் என்கிற மாயையை காட்டி இவர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்றனர். தலித்மக்கள் மதம் மாறிவிட்டால் இவர்கள் யாரிடம் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொள்ள முடியும்?.  இதுதான் அவாள்களின் சூட்சமம்!


காஞ்சி சங்கராச்சரியாரும், அத்வானியும், இன்னபிற பிராமண உயர்குலத்தோரும் என்று தாழ்த்தப்பட்ட மக்களின் குடும்பத்துடன் திருமணம் செய்ய சம்மதிக்கிறார்களோ அப்போதுதான் இவர்களுக்கு இதை பற்றி பேசும் உரிமையும், யோக்கிதையும் இருக்கிறது.
Title: Re: தலித் மக்களும் சமூக விடுதலையும்!
Post by: RemO on January 15, 2012, 05:39:14 PM
Ulagil olika pada vendiyathu Saathikal matumalla Mathangal kooda thaan
Ipothu naan uyar saathi nee thaalntha saathi ena pesuvor, naalai en matham than siranthathu entru koori pirivimaiyai uruvakuvarkal
Title: Re: தலித் மக்களும் சமூக விடுதலையும்!
Post by: Yousuf on January 15, 2012, 05:50:23 PM
நன்றி ரெமோ!
Title: Re: தலித் மக்களும் சமூக விடுதலையும்!
Post by: Global Angel on January 19, 2012, 01:54:18 AM

புலம் பெயர் நாடுகளை பொறுத்தவரை சாதி மதம் இனம் எல்லாம் இப்பொது பார்ப்பது அருகி வருகின்றது இன்னும் பத்து ஆண்டுகளில் இல்லமால் கூட போய்விடலாம்
Title: Re: தலித் மக்களும் சமூக விடுதலையும்!
Post by: Yousuf on January 19, 2012, 09:23:10 AM
நான் இங்கு கட்டுரை இட்டுருப்பது இந்தியாவை பற்றிதான் ஏஞ்செல் புலம்பெயர் நாடுகளை பற்றி அல்ல!

இந்த மக்களுக்கு விடுதலை வேண்டும்!

நன்றி ஏஞ்செல்!