FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 10, 2016, 10:57:18 AM

Title: ~ கர்ப்பிணி பெண்களுக்கான ஹெல்தி கஞ்சி ~
Post by: MysteRy on March 10, 2016, 10:57:18 AM
கர்ப்பிணி பெண்களுக்கான ஹெல்தி கஞ்சி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fhelth.jpg&hash=613b919aafe1c6a170e30a0fed1ee240ea13a8fc)

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று
வெங்காயம் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 6
பச்சை பட்டாணி – சிறிதளவு
அரிசி – 3/4 கப்
தக்காளி – பாதி பழம்
பச்சை மிளகாய் – 2
பாசிப்பருப்பு, கிட்னி பீன்ஸ், black eye பீன்ஸ் – 1 /4 கப் மூன்றும் சேர்த்து
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
தேங்காய் – 2 தேக்கரண்டி(துருவியது)
உப்பு – தேவையான அளவு
சீரகம், வெந்தயம்(சேர்த்து)- அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – தேவையான அளவு

வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். புதினா கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
பருப்பு வகைகளை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து ஆற வைக்கவும்.
மிக்ஸியில் அரிசியை போட்டு பொடித்துக் கொள்ளவும்.
அதைப் போல் பருப்பு வகைகளையும் பொடித்துக் கொள்ளவும்
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் அதிகம் வதங்காமல் இருக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பச்சைமிளகாய், கடலை பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் புதினா, கொத்தமல்லி மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
அதில் 5 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.(அரிசி பருப்பு பொடி சேர்த்து 1 கப் அளவு இருக்க வேண்டும்) தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் அரிசி, பருப்பு பொடி சேர்த்து, கட்டி ஆகாமல் கிளறிக் கொண்டே சேர்க்கவும். பிறகு தேங்காய் துருவல், தக்காளி, உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கிளறி குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் விடவும்.
ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து தேவையென்றால் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
சுவையான ஹெல்தி கஞ்சி ரெடி. டயட்டில் இல்லாதவர்கள் உளுந்து வடை, சமோசாவுடனும் சாப்பிடலாம். காய்கறி பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம். இதில் மட்டன் கொத்துக்கறி, சிக்கனை சிறுத்துண்டுகளாக வெட்டியும் சேர்க்கலாம். ஸ்வீட் கார்ன் பிடித்தவர்கள் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். காய்ச்சல், சளி, கர்ப்பமாக இருக்கும் போதும் வாய்க்கு ரொம்ப ருசியா இருக்கும்.