FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 09, 2016, 11:41:18 PM
-
தக்காளி ஊத்தாப்பம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fytre.jpg&hash=9c1a6dbed7a97f955dc590cbc166aa918f4ad3b9)
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 4 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
கேரட் – 1/2 கப் (துருவியது)
பட்டாணி – 1/2 கப் (வேக வைத்தது)
தக்காளி – 1/4 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 6 (நறுக்கியது)
இஞ்சி – 2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லி மாவில் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, மாவை தோசை போன்று, ஆனால் சற்று தடிமனாக ஊற்றி, அதன் மேல் நறுக்கிய காய்கறிகளை தூவி, எண்ணெய் ஊற்றி, பின் மூடி வைத்து மூட வேண்டும்.
2-3 நிமிடம் கழித்து, மூடியை திறந்து, மறுபக்கம் திருப்பி போட்டு 1 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். இப்போது சுவையான தக்காளி ஊத்தாப்பம் தயார்.
இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.