FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 08, 2016, 10:04:33 PM
-
கறிவேப்பிலை சாதம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F02%2FCurry-Leaves-Rice-jpg-1075.jpg&hash=8da4a4c141bc15eddc1e95685c74589732a01be7)
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் – 1 கப்
கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
கருப்பு உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
தாளிக்க :
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 5
கடுகு – 1 தேக்கரண்டி
செய்முறை:
• ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, சீரகம் போட்டு நன்று வறுத்து கொள்ளவும்.
• அடுத்து கறிவேப்பிலையை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
• இவை நன்றாக ஆறிய பின்னர் நன்றாக பொடித்து கொள்ளவும்.
• வேக வைத்த சாதத்தில் இந்த பொடியை இட்டு, கடுகு, முந்திரிப் பருப்பு தாளித்து, உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
• இது சத்தான, ருசியான சாதம். வேலைக்கு செல்பவர்கள் மதிய உணவாக எளிதாக செய்து எடுத்து கொண்டு செல்லலாம். இதற்கு வெங்காய தயிர்ப்பச்சடி அல்லது வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி தொட்டுக் கொள்ளலாம்.