FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 08, 2016, 09:32:46 PM

Title: ~ இறால் சமோசா ~
Post by: MysteRy on March 08, 2016, 09:32:46 PM
இறால் சமோசா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F02%2FBaVVEBvIUAAA93v.jpg-large.jpg&hash=6531356d03efd355dc127aaea88ff4e953267cd1)

மைதா மாவு – 5 க்ளாஸ்
நெய் – 50 கிராம்
இறால் – 300 கிராம்
உருளைக்கிழங்கு – 300 கிராம்
கேரட் – இரண்டு
பச்சைபட்டாணி – ஒரு கோப்பை
வெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – இரண்டு
கரம் மசாலாத்தூள் – இரண்டு கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு கரண்டி
எண்ணெய் – அரை லிட்டர்

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணியை நன்றாக வேக விடவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். நெய்யை சூடுப்பண்ணி மாவில் ஊற்றி நன்றாக பிசைந்து அரைகப் தண்ணீர் சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக போட்டு அரைமணி நேரம் வைக்கவும். வேகவைத்த காய்களை தோல் எடுத்து உருளைக்கிழங்கை உதிர்த்து வைக்கவும். கேரட்டை பொடியாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் ஐந்துகரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும். இதில் இறாலை போட்டு அதனுடன் எல்லா தூள்களையும் போட்டு நன்கு பொரியவிடவும். இறால் பாதி வெந்ததும் அதில் வேகவைத்த காய்களைப் போட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். பின் ஒரு உருண்டையை எடுத்து மெல்லிய அப்பளமாக இட்டு அதில் ஒன்றரைகரண்டி மசாலா கலவையை எடுத்து அதில் வைத்து சுற்றிலும் தண்ணீர் தடவி முக்கோணமாக மடிக்கவும். இதே போல எல்லா உருண்டைகளையும் செய்து வைக்கவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் சமோசாக்களைப் போட்டு இருபுறமும் சிவக்க விட்டு பொரித்து எடுக்கவு