FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 08, 2016, 09:30:06 PM

Title: ~ வெங்காயத்தாள் துவையல் ~
Post by: MysteRy on March 08, 2016, 09:30:06 PM
வெங்காயத்தாள் துவையல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fven.jpg&hash=97dec10ce3303897415e4d5e14b01a51b9df07ac)

தேவையான பொருட்கள் :

வெங்காயத்தாள் – 2 கட்டு
உளுந்து – 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு

செய்முறை :

* வெங்காயத்தாளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி உளுந்து, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்தபின் புளியை போட்டு வறுக்கவும்.
* அடுத்து அதில் வெங்காயத்தாளை போட்டு வதக்கி ஆறவைக்கவும்.
* ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்..
* சுவையான வெங்காயத்தாள் சட்னி ரெடி.
* விருப்பினால் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளலாம்.