FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on January 14, 2012, 09:56:49 PM
-
ஏன் என்னாச்சு நம் இந்திய பிரதமருக்கு என்கிறீர்களா ? ..
ஏற்கனவே சினிமா துறையினாலும் - அரசியல் வாதிகளாலும் நாசமாகி கொண்டிருகிறது நம் இந்திய தேசம் ! இந்நிலையில்
ஒய் திஸ் கொலவெறிடி என்ற ஒற்றைப்பாடலில், அதை எழுதிப் பாடி நடித்த நடிகர் தனுஷ் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங், நடிகர் தனுஷை விருந்திற்கு அழைக்கும் அளவுக்கு சினிமா மீது கொலவெறியில் இருக்கிறது நம் இந்திய அரசு !!
ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்க தனுஷுக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு கொடுக்கப்பட்டது. என்ன ஒரு கேவலம் பாருங்கள்!
இந்தச்செய்தியை வாசித்ததும் விரக்தியும் எரிச்சலும் ஏற்பட்டது. வேறு என்னங்க!
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் அழுத்திக்கொண்டிருக்கும் போது நமது பிரதமருக்கு இதெல்லாம் தேவையா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
ஒருநாட்டு பிரதமர் இன்னொரு நாட்டு முக்கிய தலைவர்களுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்துவது சாதாரணமாக எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படும் ராஜதந்திர நடைமுறை.
இதன்மூலம் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு, சுற்றுலா, வர்த்தகம் இவற்றை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், இதில் கலந்து கொள்ள சினிமா நடிகருக்கு அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் பாடலை குடிபோதையுடன் பாடி நடித்திருக்கும் ஓர் நடிகருக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அதிர்ச்சியளிக்கிறது.
பொதுமக்களின் பிரச்சினைகளுக்காகப் பாடுபட்டுவரும் வேறுயாரையும் கவுரவித்திருந்தால் பிரதமரின்மீதான நன்மதிப்பு உயர்ந்திருக்குமே! தமிழக அரசியலும் சினிமாவும் உடன்பிறவா சகோதரிகள். தமிழக முதல்வர்கள் பலரின் முகவரி கோடம்பாக்கம். இந்தக் கேடுகெட்ட சினிமா மோகம் நமது பிரதமரையும் விட்டுவைக்கவில்லையே என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.
வெளிநாட்டு அதிபருக்கு அளிக்கும் மரியாதை விருந்தில் அழைத்து கவுரவிக்கப்படும் அளவுக்கு யாரிந்த தனுஷ்?
ஒரு பாடலுக்குக்காக ஒரு நடிகனை பிரதமருடன் விருந்துக்கு அழைத்த பிரதமரின் 'சினிமாவெறி' ஆலோசகரை களை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இன்று பெண்களுக்கு எதிரான கொலைவெறி பாடலை பாடியவரை விருந்துக்கு அழைத்து கவுரவிக்கும் பிரதமர் அலுவலகம் நாளை, உண்மையான கொலைவெறியனுக்கும் அழைப்பு விடுக்கும்!.
குறிப்பு : நம் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் தெரியுமா ? கொலைவெறியில் இருக்கும் பிரதமருக்கு இதெல்லாம் தெரியுமோ என்னவோ ?
-
நல்ல கேள்வி யூசுப் . இதுவே சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் நல்லவர்களையோ அல்லது இந்திய தேசத்திற்கு பெருமை தேடி தந்த மக்களில் யாரையேனும் பிரதமர் விருந்திருக்கு அழைத்திருக்கிறாரா ? யார் இந்த தனுஷ் ? சினிமாவில் நடித்து பணம் சம்பாதித்த ரஜினிகாந்த் என்பவருடைய மருமகனாக இருப்பதால் இந்த அங்கீகாரமோ தெரியவில்லை.சினிமா நடிகர்கள் , கிரிக்கெட் வீரர்கள் யாவரும் பணத்திற்காகவே அந்த அந்த துறையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தேசிய பொது விருதுகளும் அங்கீகாரமும் கொடுக்கப்பட கூடாது.நூறு கோடி இந்திய மக்கள் இருந்தும் ஒலிம்பிக் விளையாட்டில் ஒரு தங்கம் வாங்க முடியவில்லை. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளால் தேசத்திற்கு என்ன பெருமை ? பிரதமர்கள் இது போன்ற நடிகர்களுக்கு கெளரவம் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.
-
நன்றி செல்வன்!
-
naatila ethanaiyo piratchanai poituruku aanal athapathiyelam pesama irukaarey intha pirathamar ena than seiraarunu yosichuturunthen :D ipa than theriyuthu avar always TV la busy nu
kudiya seekiram kavarchi nadikaikaluku party koduthaalum kodupaar
-
Ithellam Arasiyala Sagajamappa! ;D
-
உண்மைதான் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய எவளவோ பிரச்சனைகள் இருக்கும் போது கொலை வெறி சாப்பாடு கொடுக்கவேண்டியது ரொம்ப அவசியம் போலும் :D
-
நன்றி ஏஞ்செல்!