FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 06, 2016, 07:18:33 PM
-
வெங்காயப்பூ இறால் பொரியல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2FCapture8-e1456903262476.jpg&hash=fe05bca6a5c1bd57785613474550f8ad9570c0c0)
சின்ன இறால் – 400 கிராம்
வெங்காயப்பூ – 350 கிராம்
முட்டை கோவா – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – ஒரு தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 3 or 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
இறாலை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பொடி, உப்பு போட்டு பிசறி அரை மணி நேரம் உற வைக்கவும்.
வெங்காயப்பூ, முட்டை கோவா இரண்டினையும் மிகவும் மெல்லிதாக அரிந்து வைக்கவும்.
வெங்காயத்தினையும் சின்னதாக நறுக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் இறாலினை போட்டு பத்து நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.
பின்பு அதே வாணலியில் மீதம் உள்ள எண்ணெயில் சோம்பு, கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்தவுடன் வெங்காயத்தினையும் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து வெங்காயப்பூ, கோவா என்பவற்றை நன்றாக சுருளும் வரை வதக்கவும்.
அதனுள் இறாலினையும் கொட்டி சேர்த்து மிளகாய்பொடி, மிளகுபொடி, இஞ்சிபூண்டு விழுது எல்லாவற்றையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் வதக்கி மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கவும்.