FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 06, 2016, 07:14:56 PM
-
கேழ்வரகு இனிப்பு தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Ffer-e1456896684757.jpg&hash=5f606e52e51966cc489db926f9b9f37b670304e2)
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 250 கிராம்,
அரிசி மாவு – ஒரு கப்,
வெல்லம் – 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 50 மில்லி.
செய்முறை :
* வெல்லத்தை தூளாக்கி சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.
* ஒரு பாத்திரத்தில் இரண்டு வகை மாவு, வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் இருபுறமும் சிறிது நெய்விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
* சுவையான கேழ்வரகு இனிப்பு தோசை ரெடி.
* குழந்தைகளுக்கு இந்த தோசை மிகவும் பிடிக்கும்.