-
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 092
இந்த களத்தின்இந்த நிழல் படம் Maranஅவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F092.jpg&hash=2ec4d1ffb5d2c83c5c4170af456a59696a1dc44e)
-
நெருக்கத்தில் ஒரு உறக்கம்
அந்த உறக்கத்தில் ஒரு கலக்கம்
அந்த கலக்கத்தில் பிறந்த ஓர் ஏக்கம்
அந்த ஏக்கத்தில் பிறந்த கை அளவு கனவு மேகம்
எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றேன்
நம்பிக்கை இல்லாமல் சோர்ந்து போனேன்
அனுதினமும் ஒரே வட்டத்தில் வாழ்ந்து வந்தேன்
வளர்ச்சி இல்லாமல் பெருமூச்சு விட்டேன்
அக்கரையை பார்த்து படம் பிடித்து என் கண் இமைகளில் மறைத்து வைத்தேன்
புது வெள்ளம் போல ஒரு கனவை வளர்த்தே வந்தேன்
அறியாததை நினைத்து பயத்தில் சிக்கி தவித்தேன்
யாரும் பயணிக்காத பாதை... இந்த கஷ்டம் எதற்கென்றே நினைத்தேன்
மாற்றம் வேண்டும் என்று மனதில் நம்பிக்கை வளர்த்தேன்
பயத்திற்கு அடிமை ஆகமாட்டேன் என்று உறுதி கொண்டேன்
நம்பிக்கை வேரை இறுக்கமாக பிடித்து முடிவு எதுவாகினும்
வெற்றியாளன் நானே என்ற நிம்மதியோடு
இதோ பயணிக்கிறேன் என் வருங்காலம் நோக்கி
-
சுதந்திரம்
தேடி அலைகின்றேன்
தொலைந்த என் சுதந்திரத்தை
கண் இமைக்கும் கண நொடியில்
பறிபோனது என் சுதந்திரம்..
எவ்வித கவலையும் இன்றி
இறக்கை முளைத்த சிட்டாய்
சுற்றி திரிந்த நான் இன்று
கூண்டினில் அடைக்கப்பட்டேன்..
ஓய்வில்லா வேலை பளு,
முடிவில்லா மன அழுத்தம்,
உயிர் இருந்தும் ஜடமாய்
உணர்வில்லாமல் நான் ..
அதோ அந்த மச்சத்தை போல்
எனக்கும் விடிவு காலம் வரும்..
என் சுதந்திரம் வெகு தூரமில்லை
என காத்திருக்கிறேன் நம்பிக்கையோடு..
நம்பி காத்திருந்தே நாட்கள் நகர்கின்றன
விருப்பமில்லா எத்தொழிலும்
மன உளைச்சளுக்கே வழி வகுக்கும்
விரும்பியதை செய் .. மன நிறைவை அடைவாய் ..
எந்திரமாய் ஊன் உறக்கம் இன்றி உழைக்கும்
மானிடர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் !!
மைனா ~ தமிழ் பிரியை ~
-
வீழ்வது வெட்கமில்லை
வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம்
எம்பிக் குதிப்பவனுக்கு தான்
தொலைதூரமும் கையில் எட்டும்
வீழ்ந்து கிடப்பவனுக்கு
அருகில் இருப்பதும் எட்டாது
எழுந்து நின்று எம்பிக்
குதிப்பவனால் தான்
விழ முடியும்
காலம் பூராவும்
காலை நீட்டிப்
படுத்துக் கிடப்பவன் வீழ்வதில்லை
வாழ முயற்சித்தால் தானே
வீழ்ச்சி
சரித்திரம் வீரர்கள் புகழ் பாடும்
வெற்றி பெறாவிட்டாலும் கூட
கயத்தாற்றிலே கட்டபொம்மனை
தூக்கில் தொங்க விட்டாலும் கூட
சரித்திரத்தில் முதல் பக்கம்
கட்டபொம்மனுக்குத் தான்
ஜாக்சனுக்கு இல்லை
வாட்டர்லூ யுத்தத்தில்
வாளுடைந்து போனாலும்
நெப்போலியன் நெப்போலியன் தான்
சரித்திரம் என்றும் அவனை மறந்ததில்லை
வெற்றி என்பது ஓர்
இலக்கைத் தொடுவதல்ல
பல இடர்களை முறியடிப்பது
சறுக்கு மரத்தில் சற்று
சரிந்து விட்டதால் சாதனைகள்
மறைந்து விடாது
முயற்சி என்று ஒன்றிருந்தால்
சறுக்கு மரத்தின் உச்சியையும்
தொட்டு விடலாம்
உயிரில் உணர்ச்சி இருக்கும் வரை
முயற்சி செய்
நடந்ததது பலவும் பழசாகும்
உலகம் உனது வசமாகும்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2F4816974710_zpsjytothtc.png&hash=788b1e3359058706c78837489703dd2b7a0e9da6)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FImages%2F3730806451_zpso8d044qf.png&hash=230119c391bd6d5174c8b31e0e06c185b46b228e)
தோழிகள் அனைவருக்கும்
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!
-
இன்னொரு பிறவி
இன்னொரு குழந்தை பருவம்
இன்னொரு பள்ளி பருவம்
இன்னொரு தரம் அதே தாய்
தந்தையின் அரவணைப்பு
சத்தியமாய் இயலாத காரியம் ...
நினைத்த படிப்பு
நினைத்த நட்பு
நினைத்த காதல்
நினைத்த வாழ்க்கை
கண்டிப்பாய் சாத்தியம்
ஆண்களுக்கு ...
மனசாட்சியை அடகு வைத்து
மனித நேயம் மண்ணில்
மக்கி அழிந்து வரும்
மனிதர்களுக்கு நடுவில்
மா பெரும் கனவோடு
மகளிர் வாழ நினைத்தாள்
மிஞ்சுவது ஏமாற்றமே ....
தோற்றவரையும்
ஜெய்த்தவரையும் தான்
வரலாறில் காணலாம்.
பங்கே பெராதவரை
எங்கு காண்பாய்
பசியோடு இருக்கும்
பல்லிக்கு பறப்பது எல்லாம்
பூச்சியாய் தெரியுமாம்
எங்களின் கண்களுக்கு
தெரிவது என்னவோ
அடுத்த இலக்கு தான் ...
நிகழ்காலம் ஆச்சரிய குறியாகவும்
எதிர்காலம் கேள்விகுறியாகவும்
இருக்கிறது எங்களின் நிலை
யார் கேட்டது 33விழுக்காடு
உன்னிடம் நீயும் நானும் சரி சமம்
வழி விட்டு வாழ விடுங்கள் .....
ஏழ்மையிலும் நேர்மையாய்
கோபத்திலும் நிதானமாய்
தோல்வியிலும் விடாமுயற்சியாய்
உங்களுக்கு முன் நாங்கள்
முன்னேறி காட்டுவோம்
ஆணின் முனேற்றம்
குடும்பத்தை உயர்த்தும்
பெண்ணின் முன்னேற்றம்
நாட்டை உயர்த்தும்
மறவாதிர்கள் ....
முன்னேற துடிக்கும் என் அனைத்து சகோதரிகளுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்
-
சாதிக்கத் துணிந்தேன்
சமூகத்தைத் துறந்தேன்
பரந்த உலகத்தை
பார்க்கத் துடிக்கின்றேன்.
துணிவே என் திறவுகோல்
அறிவு என் ஆயுதம்
இலக்கு என் குறிக்கோள்
தைரியம் என் பலம்..
அஞ்சாமை தவிர்த்து
பொறாமை ஒழித்து
அறியாமை தகர்த்து
சாதனை படைப்போம்.
வெற்றி நம் கையில்
வீரமுடன் செயற்படுவோம்
சோம்பல் களைந்து
தீர்க்கமாய் செயற்படுவோம்
-
வசிப்பிடம் விட்டு வேறிடம் சென்றேன்
வழியது மறந்து ,விழியது பிதுங்கி
மொழியது அறியா.. மௌனங்கள் பேசி
பிடரியில் கால் பட ஓட்டம் எடுத்தேன்
என் பழைய இருப்பிடம் நோக்கி...
குளத்து நீரில் குதூகலித்தேன் ..
கடல் தனை கண்டு தாவி குதித்தேன் ..
எல்லையே இல்லா இருண்ட பரப்பில்
கண்டவை எல்லாம் காற்றாய் துரத்த..
உப்பு நீரும் என் உடலை அரிக்க..
நதி வழி கண்டு , ஓட்டம் எடுத்தேன்
என் பழைய இருப்பிடம் நோக்கி...
சிறிய மரமதில் சிறப்பாய் கூடு
அன்புடன் சிறகுகள் அரவனைத்திடவே
சுற்றி திரிந்தேன் சிறப்பாய் நானும்
அங்கொரு மரம்தான் அடர்ந்து தெரிந்ததே
கட்டிய வீட்டை விட்டு ஓடியே
அடைக்கலம் ஆனேன் அடர்ந்த மரத்தில்
அடர்ந்த மரமே மனிதனை உறுத்திட
வெட்டி சாய்த்திட விரைந்தே வந்தான் ..
விண்ணில் எழும்பி விரைந்து பறந்தேன்
என் பழைய இருப்பிடம் நோக்கி ..