FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 05, 2016, 07:37:19 PM

Title: ~ சோன்பப்டி ~
Post by: MysteRy on March 05, 2016, 07:37:19 PM
சோன்பப்டி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Ffre.jpg&hash=f270102182ff69b46f4071a970e733c3bcd99946)

தேவையானபொருட்கள்

மைதா மாவு – 500 கிராம்
சர்க்கரை – ஒரு கிலோ
தயிர் – 2 கோப்பை
முந்திரிப்பருப்பு – 40 கிராம்
நெய் – 500 கிராம்

செய்முறை:

முதலில் முந்திரிப் பருப்புகளை இரண்டு அல்லது மூன்றாக உடைத்து நெய்யில் போட்டு சிவக்கும் வரை வறுத்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் இருப்புச் சட்டியை வைத்து அதில் இரண்டு கோப்பை நீரை ஊற்ற வேண்டும். அதில் மைதா மாவையும் நெய்யில் பாதியையும் கெட்டித்தயிர், சர்க்கரை ஆகியவற்றையும் போட்டு நன்றாகக் கிளறிவிட வேண்டும்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மீதியிருக்கும் நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றித் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக வறுத்த முந்திரிப்பருப்புகளையும் அதில் கொட்டிக் கிளறி விட்டு இருப்புச் சட்டியைக் கீழே இறக்கி வைத்துவிட வேண்டும்.
பிறகு ஒரு தாம்பாளத்தில் நெய் தடவி அதில் தயாரித்திருக்கும் சோன்பப்டியைக் கொட்டுங்கள். சதுரமாகவோ அல்லது நீண்ட சதுரமாகவோ அதைக் கத்தியால் கீறி வைத்துக் கொள்ளவும்.