FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 05, 2016, 04:54:48 PM

Title: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -14
Post by: aasaiajiith on March 05, 2016, 04:54:48 PM
பல பொருள் விற்கப்படும்
பல்பொருள் அங்காடியில்
பளீச்சென உள் நுழைந்தேன்
சில பொருள் வாங்கிடவே

குளிரூட்டியின் குளுகுளு
குளிர்வாங்கியோ என்னவோ
புத்துணர்வுப் பொலிவாய்  காய்கனிகள்   

கோவக்காய் கையெடுத்தேன்
கொஞ்சுமினிமை தன்மையினோடு
கோர்வையாய் பாவை நின் நினைவுகள் .

குடைமிளகாய் கைகொண்டேன்
மடை திறந்த மழைவெள்ளமாய்
தடையின்றி நின் நினைவுகள் .

கருந்திராட்சை கண்கண்டேன்
கண்ணுக்குள் உன் குட்டிகுட்டி
கண்மணிகள் என் நினைவில் .

ஈதென்ன ஓர் மாயம்
யாதெதுவும் நான் கண்டு,கொண்டால்
நின் இனி நினைவே தோதாக 

எந்தனை இவ்விபரீதமென எண்ணி
எத்தனை நிமிடமென்றும் நினைவில்லை
ஆங்கே அடுத்த அலமாரியினில்
செர்ரி பழத்திற்கும் , செங்கொடி முந்திரிக்கும்
சாறு ஆறாய் ஓடிடும்படி  கடும் சண்டை
முத்தம் ஒற்றும் முத்து இதழ்களுக்கு
மொத்தமாய் ஒப்புமை யாருக்கென..

இத்தனை சிறிய இதழ்களுக்கே
அத்தனை பெரிய கடும் சண்டையெனில்
இன்னும் அத்தனை குவியல்கள் அழகிருக்கே
எத்தனை எத்தனை கலவரம்
களேபரம், பிரளயம் வெடிக்குமோவென

மெல்ல காய்கனி பகுதி விடுத்தவனாய்
பொதுசரக்கு பகுதிக்கு புகுத்திக்கொண்டேன்

Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -14
Post by: Maran on March 05, 2016, 06:04:27 PM


அழகான கவிதை நண்பா... பல்பொருள் அங்காடியை மையப் பொருளாக எடுத்து அதில் மெல்லிய காதலிசத்தை புகுத்தி கவிதையில் பின்னி சடை போட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்  :)  :)    :)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FImages%2FMankatha_zpstdcmdce8.jpg&hash=8f63071f0bfd0454dcfb81706190e7ddd0ed99f1)


Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -14
Post by: SweeTie on March 12, 2016, 05:41:35 AM
காய் கனி அங்காடியை பாவை அவள் நினைவு  அமர்க்களப்
படுத்தியதோ  என்றெண்ணத் தோன்றுகிறதே!!!!  அழகான கவிதை
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -14
Post by: aasaiajiith on March 12, 2016, 02:18:23 PM
வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றிகள் !
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -14
Post by: supernatural on March 13, 2016, 12:10:28 PM
கோவக்காய்...குடைமிளகாய்..கருந்திராட்சை..காய்கனிகுள்ளும் அவள் நினைவுகளா.....அழகிய படைப்பு...
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -14
Post by: aasaiajiith on March 14, 2016, 02:03:24 PM
வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றிகள் !