FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 05, 2016, 01:41:41 PM
-
சோம்பின் மருத்துவக் குணங்கள்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11836865_408843922657295_2399478659176129848_n.jpg?oh=5b1ba979fa46f76bdea68c231c6293e5&oe=5799112E)
பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டுச் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். உண்ணும் உணவைச் சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்துச் சமைப்பார்கள்.
இதைப் பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. பசியைத் தூண்ட, செரிமான சக்தியைத் தூண்ட,குடல்புண் ஆற,வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் நீங்க, கருப்பை பலம்பெற, ஈரல் பாதிப்பு நீங்க, இருமல், இரைப்பு மாற சோம்பு உதவும்.