FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 05, 2016, 01:40:35 PM

Title: ~ அஸ்பாரகஸ் ~
Post by: MysteRy on March 05, 2016, 01:40:35 PM
அஸ்பாரகஸ்

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/10982782_410408472500840_381516199168374979_n.jpg?oh=4a1d4c42b36b2c5ba48d91e232e76336&oe=574E938B&__gda__=1469648767_b8cec41b8125768f3154ae6064debb28)

அஸ்பாரகஸ் என்பது ஒரு பூண்டுத் தாவரமாகும். நீண்டகாலம் வாழும் தன்மையுடையது. இந்தத் தாவரம் உயரமாகவும், தடித்த தண்டுகள் கொண்டும், அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக் கொத்துகளைக் கொண்டும் காணப்படுகிறது. இதன் பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். இந்தப் பூக்கள் தனியாகவோ, கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ, கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும்.

இது ஒரு இரு பால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும்.
ஆனால், சில நேரங்களில் இரு பாலினத்து உறுப்புக்களும் ஒரே பூவில் காணப்படும். இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிவப்பு பெர்ரியைப் போன்று, 6 முதல் 10 mm அளவில் இருக்கும். இது காய்கறி பயிராக அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது.

கடல் சார்ந்த பகுதிகளில்தான் அஸ்பாரகஸ் அதிகமாக வளரும். ஏனெனில், அஸ்பாரகஸ் விளையும் நிலம் மிகவும் உப்பு நிறைந்ததாக இருக்கும்.
அஸ்பாரகாசில் கொழுப்புச்சத்து இல்லை, குறைந்த அளவில் கலோரி மற்றும் சோடியம் இருப்பதால் ஆரோக்கியமான உணவு என்றும் கூறலாம். போலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை வெள்ளைத் தங்கம் என்றும் அழைப்பர்.