FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on March 05, 2016, 12:16:50 PM

Title: ~ அம்மா... ~
Post by: MysteRy on March 05, 2016, 12:16:50 PM


(https://pixabay.com/static/uploads/photo/2014/04/03/10/20/mother-310135_960_720.png)


அம்மா...

அருந்தவம் புரிந்து
அடிமடியில் சுமந்து
அழகு மகை ஈன்றவளே!
அள்ளி எடுத்து
அழுகை நிறுத்தி
அமுது புகட்டுபவளே!
அன்பைப் பொழிந்து
அறிவைப் பெருக்கி
அரவணைத்து மகிழ்பவளே!
அறுசுவை கூட்டி
அன்னம் சமைத்து
அளவாக ஊட்டுபவளே!
அல்லும் பகலும்
அலுவல் செய்து
அயராது விழித்திருப்பவளே!
அருகில் அமர்த்தி
அச்சம் நீக்கி
அமைதி காப்பவளே!
அன்று என்றும்
அரணாய் நின்று
அபயம் தருபவளே!
அழியாத ஓவியமாய்
அன்பு நெஞ்சங்களில்
அமர்ந்து இருப்பவளே!
அருமை மகளய்ப் பிறந்து
அன்புக் கண்மணியாய் மணந்து
அன்னையென வாழ்பவளே!
அந்த ஆண்டவனின்
அவதாரமாய் வந்த உன்னையே
‘அம்மா’ என்றே அழைத்திடுவோம்!
அகம் மகிழ என்றும் வாழ்ந்திடுவோம்!
Title: Re: ~ அம்மா... ~
Post by: Maran on March 05, 2016, 03:21:00 PM



கவிதாயினி MysteRy!  :) கவிதை Superb... அருமை, அழகான வரிகள் தோழி. வார்த்தைகளை அடுக்கும் விதம் அழகு.


இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் தோழி, வாழ்த்துக்கள்.  :)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FImages%2Fsuper_zpsrbdyewhc.jpg&hash=f7a7e4e75a28050081441e5e2b2e4d863cb4dc6d)


எல்லா அம்மாக்களும் தன் பிள்ளைகளை பற்றி சொல்ற ஒரே விஷயம்.....
"எம்புள்ள பசி தாங்காது"

எவ்வளவு தான் நம் கையால் உணவை எடுத்து சாப்பிட்டாலும் பசி அடங்கலாம் ... ஆனால் அம்மா ஊட்டி விடும் ஒரு கை சோறுக்கு ஈடாகாது...



Title: Re: ~ அம்மா... ~
Post by: MysteRy on March 05, 2016, 08:53:15 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F9HZbdHF.jpg&hash=8d59b92920ab86e55823e8b7d1038e9413feb44a)