FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 05, 2016, 09:55:19 AM
-
இறால் தொக்கு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fpra-e1456729455272.jpeg&hash=0d2c5aab72f7ad2bec65d1e8fcce63893725537e)
இறால் – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி, பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
பட்டை இலை – ஒன்று
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வெண்ணெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை – சிறிது
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் ஊற்றி, இறாலைப் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, பட்டை இலை, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (இறாலுடன் உப்பு சேர்த்திருப்பதால் வதக்கும் போது குறைவாக உப்புச் சேர்க்கவும்).
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கி, பொரித்து வைத்துள்ள இறால் மற்றும் மிளகாய் தூள் போட்டு பிரட்டவும்.
பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும். (தண்ணீர் அதிகமாகச் சேர்க்கக் கூடாது). இடையிடையே கிளறிவிட்டு, சற்று கெட்டியாகி தொக்கு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
சுவையான இறால் தொக்கு தயார்.