FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 04, 2016, 08:09:16 PM

Title: ~ சிக்கன் 65 ~
Post by: MysteRy on March 04, 2016, 08:09:16 PM
சிக்கன் 65

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2FChicken_65_546d467a-e926-4d17-9b65-99e728a391ebChicken_651.jpg&hash=1945c34d5dcffbe7deef83bf9ce725463e3e1dac)

தேவையானபொருட்கள்:

சிக்கன் – அரை கிலோ
சிக்கன் 65 பவுடர் – 50 கிராம்
முட்டை – ஒன்று
பூண்டு – 5 கிராம்
இஞ்சி – 5 கிராம்
கெட்டித்தயிர் – 25 மில்லி
எண்ணெய் – அரை லிட்டர்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
 
பூண்டு, இஞ்சி ஒவ்வொன்றும் 5 கிராம் எடுத்து நன்றாக அரைக்கவும்.
முட்டை ஒன்றை எடுத்து ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி அடித்து கொள்ளவும்.
சிறிய துண்டுகளாக வெட்டிய கோழிக் கறியை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
இப்போது கறித்துண்டுகளுடன் 25 மில்லி கெட்டி தயிர், சிக்கன் 65 பவுடர், முட்டை, அரைத்த இஞ்சி, பூண்டு விழுது கலந்து நன்றாக கிளறவும். தேவையெனில் சிறிது உப்பினைச் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு கிளறி சுமார் அரைமணி நேரம் ஊறவிடவும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதென்றால் இன்னும் சில மணிநேரங்கள் கூடுதலாக ஊற விடலாம்.
வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
பின்பு, எண்ணெய் சூடேறியவுடன் கறித்துண்டங்களை சிறிது சிறிதாகப் போட்டு இளஞ் சிவப்பு நிறம் வந்தவுடன் எடுக்கவும்.