FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 04, 2016, 08:06:53 PM
-
ஃபிரெஞ்சு க்ரில் கோழி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fvgf1.jpg&hash=a7490bcfcaa63fd7dedbb6a0fbcc3e729e25883d)
முழுக்கோழி – ஒன்று (உத்தேசமாக ஒரு கிலோ)
ஸ்பைசி க்யூப் – ஒன்று
ஹெர்பெல் இலைகள் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 10 பற்கள்
வெள்ளை மிளகு – ஒரு தேக்கரண்டி
சுக்கு பவுடர் – ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் – ஒரு மேஜைக்கரண்டி
அஜினோமோட்டோ – 2 சிட்டிகை
சின்ன உருளைக்கிழங்கு – 15
பிரிஞ்சி இலை – 8
பூண்டை நசுக்கிக் கொள்ளவும். எண்ணெய், இறைச்சி, உருளைக்கிழங்கு தவிர மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, க்யூபையும் நன்றாக நசுக்கிவிட்டு, ஒன்றாக பிசறிக் கொள்ளவும்.
முழுக்கோழியின் முடிகளை மட்டும் நீக்கி, தோலுடன் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்பு மசாலா கலவையை அனைத்து இடங்களிலும் பரவும்படி பூசவும்.
கோழியின் உட்புறமும் பூசவும்.
ஒரு கத்தியால் கோழியின் முதுகு பாகத்தில் இரண்டுபுறமும் கீறிவிடவும்.
இப்போது ஒரு பிளாஸ்டிக் பேப்பரினால் மசாலாத் தடவிய கோழி இறைச்சியை மூடி, ஃபிரிஜ்ஜில் வைத்துவிடவும். (முதல் நாள் இரவே இதனை செய்து வைத்துவிடவும்.)
மறுநாள் உருளையை அவித்து தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.
அவனை 75 நிமிடங்கள் செட் செய்துகொள்ளவும். கோழியின்மேல் ஆலிவ் ஆயிலை பரவலாக தடவவும்.
சில அவனில் பிரத்தியோகமாக கிரில் செய்யப்படுவதற்கான வசதி இருக்கும். அதற்கு தேவையானதுதான் இந்த கம்பி. இதன் நடுவில் இருக்கும் நீளமான கம்பியில்தான் கோழியை சொருக வேண்டும். இதை 250 டிகிரி F ஹீட்டில் செட் செய்துகொள்ளவேண்டும்,
கோழி இறைச்சியை கம்பியில் சொருகி, இரண்டு பக்கமும் டைட்டாக நெருக்கி, நெட்டை டைட் செய்து அவனில் வைக்கவும். கோழி இப்பொழுது சுற்ற ஆரம்பிக்கும். 15 நிமிடங்களுக்கு பிறகு அவித்த உருளையை அவனில் பரப்பினாற்போல் வைக்கவும்.
பிரிஞ்சி இலையில் இரண்டை கோழியின் உள்ளேயே வைத்துவிடவும். மீதம் உள்ள இலைகளை உருளையின் மேல் பரவலாகப் போடவும் பின்பு செட் செய்த நிமிடங்கள் முடிந்ததும் வெளியே எடுத்து கோழியை கம்பியில் இருந்து உருவவும்.
இதுவே ஃபிரெஞ்சு க்ரில் கோழி. இதற்கு மயோன்னிஸ், கெட்சப், சில்லிசாஸ் தொட்டு கொள்ள ஏற்றதாக இருக்கும்.