FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 04, 2016, 12:11:24 PM

Title: ~ இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு ~
Post by: MysteRy on March 04, 2016, 12:11:24 PM
இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/12806036_1541906739440129_3726385105586015763_n.jpg?oh=c0635456cbc34d1d902abed71b581883&oe=57540269&__gda__=1465169928_49e2ab32426caa55b13bb6b4d2d1ce52)

தேவையான பொருட்கள்:

இளம் இஞ்சி - 25 கிராம்,
பிஞ்சு பச்சை மிளகாய் - 10,
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
அச்சு வெல்லம் - ஒன்று,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை:

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

* இஞ்சியை தோல் சீவி நறுக்கவும்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி ஆற வைக்கவும்.

* ஆற வைத்த பச்சை மிளகாய், இஞ்சியுடன், புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

* மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.