FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 03, 2016, 09:20:24 PM

Title: ~ புதினா சட்னி ~
Post by: MysteRy on March 03, 2016, 09:20:24 PM
புதினா சட்னி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fcscas.jpg&hash=763e20dfc6603979e0b18078fe192f1a417efae2)

தேவையான பொருட்கள்

புதினா – 1 / 2 கட்டு
கொத்தமல்லி இலை – 1 கட்டு
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 2 பல்
இஞ்சி – 1 துண்டு
கருவேப்பிலை – 1 கொத்து
தேங்காய் – 2 தேக்கரண்டி ( தேவையெனில் )
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி

செய்முறை

புதினா,கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, தேங்காய் இவை அனைத்தையும் வதக்கிக் கொள்ளவும்.
வதக்கியவற்றுடன் புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு ,கருவேப்பிலை, சீரகம் தாளித்துக் கொட்டவும்.