FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 03, 2016, 09:17:17 PM
-
காலிஃப்ளவர் கறி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fko.jpg&hash=acd2097cb014697a2695983f58daceccd636c708)
நறுக்கிய காலிஃப்ளவர் – 1 1/2 கப்
சின்ன வெங்காயம் – 2
தக்காளி – 1
துருவிய தேங்காய் – 1/4 கப்
சோம்பு – அரை தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
இஞ்சி – அரை அங்குலத் துண்டு
குழம்பு மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காய், சோம்பு, பூண்டு, இஞ்சி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரை 2 நிமிடங்கள் வெந்நீரில் போட்டு வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும். பட்டை, கிராம்பு கட்டாயம் கிடையாது. விரும்பினால் சேர்க்கவும். பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு 30 நொடி வதக்கி விட்டு, தக்காளியை சேர்த்து நன்கு நசுக்கி விட்டு வதக்கவும்.
பிறகு அதில் வேகவைத்து எடுத்துள்ள காலிஃப்ளவர் துண்டங்களைப் போட்டு 15 நொடிகள் வதக்கவும்.
ஒரு கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
பிறகு அரைத்த தேங்காய் கலவையை போட்டு கிளறிவிடவும்.
வாணலியை மூடி வைத்து சுமார் 3 நிமிடங்கள் வேகவிடவும். .
3 நிமிடம் கழித்து திறந்து எண்ணெய் ஊற்றி கிளறி விட்டு மீண்டும் மூடி விடவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.