FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 03, 2016, 06:27:51 PM
-
நேற்று
ஒரு அதிசயம் நிகழ்ந்தது
என்றைக்குமே நிகழாத ஒன்று
நேற்று நடந்தது
நான் இரண்டு நிலவை
ஒரே நேரத்தில் பார்த்தேன்
ஒன்று மதி
மற்றொன்றும் மதி
ஏனென்றால் உன் பெயரும்
மதி தானே
வளர்பிறையும் தேய்பிறையும்
நிலவுக்கு வாடிக்கை
நிலவென்று உனக்கு பெயர் வைத்தது
வேடிக்கை
மேகம் வந்து மறைக்கும் போதும்
மின்னல் வந்து தீண்டும் போதும்
உன்னை நினைத்து வருந்துவேன்
ஏனெனில் நீயும் மதி தானே
சோகம் கொண்ட வானத்திடம்
சொல்லாமல் எங்கு சென்றாய்
நாளை வரும் நிலவுக்காக - நான்
இன்றே காத்திருக்கிறேன்
எங்கிருந்தோ வந்த குரல் சொன்னது
நாளை அமாவாசை
மதி வராது என
உண்மை தான்
நாளை மதி வராது
நாளைக்கு கல்லூரி விடுமுறை