FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => அகராதி  => Topic started by: Global Angel on January 14, 2012, 12:24:23 AM
		
			
			- 
				தொகைச் சொல் அகராதி
அகச் சமயம் _ 6 : சைவ சமயத்தின் உட் பிரிவுகள்.
பாடாண வாதம்
பேத வாதம்
சிவ சமய வாதம்
சிவ சங்கிராந்த வாதம்
ஈசுர அவிகார வாதம்
சிவாத்துவிதம்
			 
			
			- 
				அகத்திணை _ 7   
கைக்கிளை
குறிஞ்சி
பாலை
முல்லை
மருதம்
நெய்தல்
பெருந்திணை
			 
			
			- 
				அகத்தியர் மாணாக்கர் _ 12
சேம்பூட் சே எய்
வையாபிகர்
அதங் கோட்டாசான்
அவிநயர்
காக்கை பாடினியார்
தொல் காப்பியர்
துராலிங்கர்
வாய்ப்பியர்
பனம் பாரனார்
கழாரம்பர்
நற்றத்தர்
வாமனர்
			 
			
			- 
				அகப்பகை _ 6
காமம்
குரோதம்
உலோபம்
மோகம்
மதம்
மாற்சரியம்
			 
			
			- 
				அகவலிமை _ 6
படை வலிமை
பொருள் வலிமை
துணை வலிமை
உடல் வலிமை
உள்ள வலிமை
மூலப் படை
			 
			
			- 
				அகிற் கூட்டு _ 5 
சந்தனம்
கருப்பூரம்
எரிகாசு ( காசுக் கட்டி )
ஏலம்
தேன்
			 
			
			- 
				அக்கினி _ 3 
ஆகவனீயம்
காருக பத்தியம்
தட்சிணாக்கினி
			 
			
			- 
				அக்கினி _ 5
தட்சிணாக்கினீயம்
காருக பத்தியம்
ஆகவனீயம்
சத்யம்
ஆவசத்யம்
			 
			
			- 
				அங்கம் _ 10
ஊர்
யானை
கொடி
செங்கோல்
நாடு
குதிரை
மலை
மாலை
முரசு
ஆறு
			 
			
			- 
				அங்கம் _ 5
திதி
வாரம்
நட்சத்திரம்
யோகம்
கரணம்
			 
			
			- 
				அசுவினி தேவர் _ 2
தத்தியன்
நாதத்தியன்
			 
			
			- 
				அரசர் சுற்றம் _ 5
நட்புடையோர்
அந்தணாளர்
மடைத் தொழிலோர்
மருத்துவக் கலைஞர்
நிமித்திகப் புலவர்
			 
			
			- 
				அரசர்க்குரிய குணம் _ 6
நட்பு
பகை
செலவு
இருக்கை
கூடினரைப்பிரித்தல்
கூட்டல்
			 
			
			- 
				அரசர் மாலை _ 3
சேரன் - பனம் பூ மாலை
சோழன் -ஆத்தி மாலை
பாண்டியன் - வேப்பம் பூ மாலை
			 
			
			- 
				அரசர் குலம் _ 3
சூரிய குலம்
சந்திர குலம்
அக்கினி குலம்
			 
			
			- 
				அரண் _ 4
காட்டரண்
மலையரண்
நீர் அரண்
மதிலரண்
			 
			
			- 
				அரிசி _ 6
அருணா
உலூவா
ஏலம்
கார்போகம்
விளவு
வெட்பாலை
			 
			
			- 
				அருகன் குடை _ 3
சகல பாசனம் பொற்குடை
சந்திராதித்தியம் முத்துக் குடை
நித்திய வினோதம் இரத்தினக் குடை
			 
			
			- 
				அவத்தை _ 5
ஜாக்ரம்
சொப்பனம்
சுழுத்தி
துரியம்
துரியாதீதம்
			 
			
			- 
				அவத்தை _ 7 : ஆன்மாவுக்கு நிகழக்கூடியது.
அறியாமை
ஆவரணம்
விட்சேபம்
பரோட்ச ஞானம்
அபரோட்ச ஞானம்
சோக நிவர்த்தி
தடையற்ற ஞானம்
			 
			
			- 
				அளவை _ 7
நிறுத்து அளத்தல்
பெய்தளத்தல்
சார்த்தியளத்தல்
நீட்டி யளத்தல்
தெறித்தளத்தல்
முகந்து அளத்தல்
எண்ணியளத்தல்
			 
			
			- 
				அறம் _ 32
நோயாளிக்கு உணவிடுதல்
திருமுறை ஓதுவார்க்கு உணவிடுதல்
அறு சமயத் தோர்க்கு உணவு
பசுவிற்கு உணவு
சிறையில் உள்ளோர்க்கு உணவு
பிச்சையிடுதல்
தின் பண்டம் தருதல்
அறவைச் சோறு
மகப் பெறுவித்தல்
மகவு வளர்த்தல்
மகப் பால் வார்த்தல்
அறவைப் பிணம் சுடுதல்
அறவைத் தூரியம்
சுண்ணாம்பு தருதல்
நோய்க்கு மருந்து தருதல்
வண்ணார்க்கு உதவுதல்
நாவிதர்க்கு உதவுதல்
கண்ணாடி தருதல்
காதோலை தருதல்
கண் மருந்து தருதல்
தலைக்கு எண்ணெய் தருதல்
பெண் போகம்
பிறர் துயர் காத்தல்
தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்
மடம் கட்டுதல்
சோலை அமைத்தல்
குளம் வெட்டுதல்
ஆவுரிஞ்சுதறி அமைத்தல்
விலங்குக்கு உணவு தருதல்
ஏறு விடுத்தல்
விலை கொடுத்து உயிர் காத்தல்
கன்னிகாதானம்
அன்னம் _ 7
சுத்தான்னம் - சோறு மட்டும்
மத்வன்னம் - தேன் கலந்த சோறு
தத்யன்னம் - தயிர் கலந்த சோறு
பாயசான்னம் - அரிசி பருப்பு கலந்த சோறு
கிருசாரன்னம் - நெய் முதலியன கலந்த சோறு
குளான்னம் - பால், வெல்லம், நெய் கலந்த சோறு
முற்கான்னம் _ தேங்காய், பயறு கலந்த சோறு
			 
			
			- 
				அஷ்ட சக்தி _ 8
வாமை
சியேட்டை
இரெளத்திரி
காளி
கலவிகரணி
பலவிகரணி
பலப்பிரதமனி
சர்வ பூததமனி
			 
			
			- 
				அஷ்ட பிரபந்தம் _ 8
திருவரங்கக் கலம்பகம்
திருவரங்கத்து மாலை
திருவரங்கத் தந்தாதி
ஸ்ரீரங்க நாயகர் ஊசல்
திருவேங்கட மாலை
திருவேங்கடத்தந்தாதி
அழகர் அந்தாதி
நூற்றெட்டுத் திருப்பதி
			 
			
			- 
				அஷ்ட லட்சுமி _   8
தன லட்சுமி
தான்ய லட்சுமி
தைரிய லட்சுமி
விஜய லட்சுமி
வீர லட்சுமி
சந்தான லட்சுமி
கஜ லட்சுமி
வித்யா லட்சுமி
			 
			
			- 
				அஷ்ட வைரவர் _ 8
மகா வைரவர்
உக்கிர வைரவர்
சண்டாள வைரவர்
குரோத வைரவர்
உன்மத்த வைரவர்
காபால வைரவர்
பூஷண வைரவர்
சாகர வைரவர்
			 
			
			- 
				அட்சரங்கள் _ 5 : பஞ்ச பூத அட்சரங்களாவன
பிருதிவி - 11
அப்பு - 10
தேயு - 8
வாயு - 19
ஆகாயம் - 3 ( ஆக - 51 )
			 
			
			- 
				ஆகமம் _ 28 சிவாகமங்கள் விவரம் வருமாறு   
காமிகம்
யோகஜம்
சிந்த்யம்
காரணம்
அஜிதம்
தீப்தம்
சூஷ்மம்
ஸஹஸ்ரம்
அம்சுமான்
சுப்ர பேதம்
விஜயம்
நிச்வாசம்
ஸ்வாயம் புவம்
அனலம்
வீரம்
ரெளரவம்
மகுடம்
விமலம்
சந்ரக் ஞானம்
முகபிம்பம்
பிரோத் கீதம்
லலிதம்
சித்தம்
ஸந்தானம்
சர்வோக்தம்
பாரமேச்சுவரம்
கிரணம்
வாதுளம்
			 
			
			- 
				ஆசாரம் _ 5 : வீர சைவத்தின் ஆசாரங்களாவன
இலிங்கா சாரம்
சதாசாரம்
சிவா சாரம்
பிரத்யா சாரம்
கணா சாரம்
			 
			
			- 
				ஆசிரமம் _ 4
பிரமசரியம்
கிருகத்தம்
வானப் பிரஸ்தம்
சந்யாசம்
			 
			
			- 
				ஆசனம் _ 20
பத்மாசனம்
சித்தாசனம்
சுவஸ்திகாசனம்
சுகாசனம்
சிரசானம்
சர்வாங்காசனம்
மத்சாசனம்
புஜங்காசனம்
தனுர் ஆசனம்
மயூராசனம்
திரிகோணாசனம்
சவாசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
ஹாலாசனம்
சலபாசனம்
பஸ்சிமோத்தானாசனம்
யோகமுத்ராசனம்
பாதஹஸ்தாசனம்
உட்டியாணாசனம்
நெளவி முதலியன
			 
			
			- 
				ஆடல்கள் _ 11 : கூத்துகள்
அல்லியம்
கொட்டி
குடை
குடம்
பாண்டரங்கம்
மல்
துடி
கடையம்
பேடு
மரக்கால்
பாவை
			 
			
			- 
				ஆடவர் பருவம் _ 7
பாலன் 1-7 வயது
மீளி 8-10 வயது
மறவோன் 11-14 வயது
திறவோன் 15 வயது
காளை 16 வயது
விடலை 17 -30 வயது
முதுமகன், 30 வயதுக்கு மேல்
			 
			
			- 
				ஆண் நட்சத்திரம், ஆண் நாள் _ 10
பரணி
கார்த்திகை
உரோகிணி
புனர்பூசம்
பூசம்
அத்தம்
அனுடம்
திருவோணம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
			 
			
			- 
				ஆண் பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவம் _ 10
காப்பு
செங்கீரை
தாலம்
சப்பாணி
முத்தம்
வருகை
அம்புலி
சிறுபறை
சிற்றில் சிதைத்தல்
சிறு தேருருட்டல்
			 
			
			- 
				ஆதாரம் _ 6   
மூலாதாரம்
சுவாதிட்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுத்தி
ஆஞ்ஞை
			 
			
			- 
				ஆதித்தர் _ 12
வைகத்தன்
விவச்சுதன்
வாசன்
மார்த்தாண்டன்
பாஸ்கரன்
ரவி
உலோகப் பிரகாசன்
உலோக சாட்சி
திரி விக்ரமன்
ஆதித்தன்
திவாகரன்
அங்கிச மாலி
			 
			
			- 
				ஆலய விமானம் _ 3
நாகரம்
திராவிடம்
வேசரம்
			 
			
			- 
				ஆழ்வார்கள் _ 12
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசையாழ்வார்
நம்மாழ்வார்
குலசேகராழ்வார்
பெரியாழ்வார்
தொண்டரடிப் பொடியாழ்வார்
திருப் பாணாழ்வார்
திருமங்கை யாழ்வார்
ஸ்ரீ ஆண்டாள்
மதுரகவி யாழ்வார்
			 
			
			- 
				ஆறுகால பூசை நேரங்கள் _ 6
உஷத் காலம்
கால சந்தி
உச்சிக் காலம்
சாயரட்சை
பிரதோஷம்
அர்த்த சாமம்
			 
			
			- 
				ஆன்மாவின் பகை _ 6
காமம்
வெகுளி
கடும் பற்றுள்ளம்
மானம்
உவகை
மதம்
			 
			
			- 
				இசைக் கருவி _5   
தோற் கருவி
துளைக் கருவி
நரம்புக் கருவி
கஞ்சக் கருவி
கண்டக் கருவி
			 
			
			- 
				இராசி _ 12
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீணம்
			 
			
			- 
				இராசிக் குரிய செயல் _ 6
ஓரை
சுடர்ச் செலவு
திரேக்காணம்
நவாமிசம்
துவாதசாமிசம்
கோட்கூறு
			 
			
			- 
				இருடிகள் _ 7
அகத்தியன்
புலத்தியன்
அங்கிரசு
கெளதமன்
வசிட்டன்
காசிபன்
மார்க்கண்டன்
அல்லது  
அத்திரி
பிருகு
குச்சன்
வசிட்டன்
கெளதமன்
காசிபன்
அங்கிரசு எனவும்,
மரீசி
அத்திரி
அங்கிரசு
புலஸ்தியன்
புலகன்
கிரது
வசிட்டன் எனவும் கொள்வர்.
			 
			
			- 
				
இருடிகள் _ 11
அத்திரி
வசிட்டர்
புலஸ்தியர்
கிருது
பரத்வாசர்
விஸ்வாமித்திரர்
பிரதேசன்
ருசிகர்
அகத்தியர்
ததீசி
துர்வாசர்
			 
			
			- 
				இருதுக்கள் _ 6
வசந்தருது - சித்திரை, வைகாசி
கிரீஷ்மருது - ஆனி, ஆடி
வ்ருஷருது - ஆவணி, புரட்டாதி
சரத்ருது - ஐப்பசி, கார்த்திகை
ஹேமந்த ருது - மார்கழி,தை
சசிருது - மாசி, பங்குனி
			 
			
			- 
				இலக்கணம் _ 5
எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி
			 
			
			- 
				இழிச் சொல் _ 4
குறளை
பொய்
கடுஞ் சொல்
பயனில் சொல்
			 
			
			- 
				இறைவன் குணங்கள் _ 8
தன்வயத்தனாதல்
தூய உடம்பினனாதல்
இயற்கை உணர்வினனாதல்
முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்
பேரருளுடைமை
முடிவில்லாத ஆற்றல் உடைமை
வரம்பில்லாத இன்பம் உடைமை
			 
			
			- 
				இளம் பஞ்ச பாண்டவர் _ 5
பிரிதிவிந்தன்
சுருதசோமன்
சுருத கீர்த்தி
சதாநீகன்
சுருத சேனன்
இவர்கள் திரெளபதியின் பால் முறையே
தருமன்
வீமன்
அருச்சுனன்
நகுலன்
சகாதேவன் ஆகியவருக்குப் பிறந்தவர்கள்
			 
			
			- 
				ஈசனின் ஐம்முகம் _ 5
ஈசானம்
வாமதேவம்
அகோரம்
சத்தியோசாதம்
தற்புருடம்
			 
			
			- 
				உடற் குறை _ 8குறள்
செவிடு
மூங்கை
கூன்
குருடு
மருள்
மா
உறுப்பிலாப் பிண்டம்
			 
			
			- 
				உணவு _ 5
கடித்தல்
நக்கல்
பருகல்
மெல்லல்
விழுங்கல்
			 
			
			- 
				உண்மைப் பொருள் _ 3
பதி
பசு
பாசம்
			 
			
			- 
				உபசாரம் _ 16
தாம்பூலம் அளித்தல்
இருக்கையளித்தல்
கை கழுவ நீர் தருதல்
கால் கழுவ நீர் தருதல்
குடிக்க நீர் தருதல்
நீராட்டுதல்
ஆடை சாத்தல்
பூணூல் தருதல்
தேய்வை பூசல்
மலர் சாத்தல்
மஞ்சளரிசி தூவல்
நறும் புகை காட்டல்
விளக்கிடுதல்
கருப்பூரம் ஏத்தல்
அமுதம் ஏந்தல்
மந்திர மலரால் அருச்சித்தல்
			 
			
			- 
				சாமம்
தானம்
பேதம்
தண்டம்
அஃதாவது
இனியவை கூறுதல்
ஈதல்
வேறுபடுத்தல்
ஒறுத்தல்
			 
			
			- 
				உபதாதுக்கள் _ 7   
சுவர்ணமாட்சிகம்
தாரமாட்சிகம்
துத்தம்
காஞ்சியம்
ரீதி
சிந்தூரம்
சிலாசத்து
			 
			
			- 
				உப தாளம் _ 5
ஆதி தாளம்
பார்வதி லோசனம்
குடுக்கம்
சிங்க நந்தம்
திரிமாத்திரை
			 
			
			- 
				உப புராணம் _ 18
நாரசிங்கம்
சனற்குமாரம்
நாரதீயம்
சிவதன்மம்
துருவாசம்
நந்திகேச்சுரம்
அவுசனம்
காளிகம்
வாருணம்
சாம்பேசம்
பராசரம்
பார்க்கவம்
காபிலம்
வாசிட்டலைங்கம்
சவுரம்
மாரிசம்
ஆங்கிரம்
மாணவம்
			 
			
			- 
				உப வேதம் _ 4
ஆயுர் வேதம்
தனுர் வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த வேதம்
			 
			
			- 
				உப்பு _ 5
இந்துப்பு
கல்லுப்பு
கறியுப்பு
வளையலுப்பு
வெடியுப்பு
			 
			
			- 
				உயிர் _ 6
மக்கள்
தேவர்
பிரமர்
நரகர்
விலங்கு
பேய்
			 
			
			- 
				உயிர்த் தோற்றம் _ 4
முட்டை
வியர்வை
வித்து
வேர்
கருப்பை
			 
			
			- 
				உயிர் வேதனை _ 12
அனல்
குளிர்ச்சி
இடி
புனல்
காற்று
ஆயுதம்
நஞ்சு
நச்சு மருந்து
பசி
நீர் வேட்கை
பிணி
முனிவு அறாமை
			 
			
			- 
				உரை _ 4
கருத்துரை
பொழிப்புரை
பதவுரை
விளக்கவுரை
			 
			
			- 
				உரையிலக்கணம் _ 14
பாடம்
கருத்து
சொல் வகை
சொற் பொருள்
தொகுப்புரை
உதாரணம்
வினா
விடை
விசேடம்
விரிவு
அதிகாரம்
துணிவு
பயன்
ஆசிரிய வசனம்
			 
			
			- 
				உருத்திரர் _ 11
அரன்
மாதேவன்
உருத்திரன்
சங்கரன்
நீலலோகிதன்
ஈசானன்
விசயன்
வீமதேவன்
பவோற்பவன்
கபாலி
செளமியன்
உலகம் _ 14 
			 
			
			- 
				உலகம் _ 14 
மேலுலகம்
பூ லோகம்
புவலோகம்
சுவர்க்க லோகம்
சன லோகம்
தபோ லோகம்
சத்திய லோகம்
மகா லோகம்
கீழுலகம்
அதலம்
விதலம்
சுதலம்
தராதலம்
இரசாதலம்
மகாதலம்
பாதலம்
			 
			
			- 
				உலோகம் _ 5   
பொன்
வெள்ளி
செம்பு
இரும்பு
ஈயம்
			 
			
			- 
				உலோகம் _ 9
பொன்
இரும்பு
செம்பு
பித்தளை
தரா
துத்த நாகம்
ஈயம்
வெண்கலம்
			 
			
			- 
				உவா _ 2
அமாவாசை
பவுர்ணமி.
			 
			
			- 
				ஊழ் வகை _ 3
சஞ்சிதம்
பிராரத்துவம்
ஆகாமியம்
			 
			
			- 
				எட்டுத் தொகை : சங்க நூல்கள் _ 8
நற்றிணை
குறுந் தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப் பத்து
பரி பாடல்
கலித் தொகை
அக நானூறு
புற நானூறு
			 
			
			- 
				ஐங்கணை : மன்மதனின் அம்புகள் _ 5
தாமரை மலர்
அசோக மலர்
குவளை மலர்
மாம் பூ
முல்லை மலர்
			 
			
			- 
				ஐசுவரியம் _ 8
அரசாட்சி
மக்கள்
சுற்றம்
பொன்
மணி
நெல்
வாகனம்
அடிமை செய்யும் ஆள்
			 
			
			- 
				ஐந்தெழுத்து   :
பஞ்சாக்கர மந்திரம். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரம். 
தமிழில் சிறப்பெழுத்துகளான 
எ
ஒ
ழ
ற
ன என்னும் ஐந்தெழுத்துகள்
			 
			
			- 
				ஐம்பால் :   
இலக்கணத்தில் கூறப்படும் பகுப்பு
ஆண் பால்
பெண் பால்
பலர் பால்
ஒன்றன் பால்
பலவின் பால்
			 
			
			- 
				ஐம்புலத்தார்
தென் புலத்தவராகிய பிதுரர்
தெய்வம்
விருந்து
சுற்றத்தார்
தான்
			 
			
			- 
				ஐம் பெருங் குழு அரசர்க்குரிய கூட்டத்தார் 
அமைச்சர்
புரோகிதர்
படைத் தலைவர்
தூதுவர்
சாரணர்
			 
			
			- 
				ஐம்பெருங் காப்பியம்
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டல கேசி
			 
			
			- 
				ஐம் பொறி : ஐந்து வகையான இந்திரியங்களான 
மெய்
வாய்
கண்
மூக்கு
செவி
			 
			
			- 
				ஐம் பூதம் : ஐந்து மூலப் பொருளான   
நிலம்
நீர்
நெருப்பு
காற்று
வானம்
			 
			
			- 
				கடல் _ 7
பாற் கடல்
தயிர்க் கடல்
நெய்க் கடல்
கருப்பஞ் சாற்றுக் கடல்
தேன் கடல்
நன்னீர்க் கடல்
உப்புக் கடல்
			 
			
			- 
				கணம் _ 18
தேவர்
அசுரர்
வைத்தியர்
கருடர்
கின்னரர்
கிம்புருடர்
இயக்கர்
விஞ்ஞையர்
இராக்கதர்
கந்தருவர்
சித்தர்
சாரணர்
பூதர்
பைசாசர்
தாராகணம்
நாகர்
ஆகாசவாசிகள்
போக பூமியர்
			 
			
			- 
				கணேசுரர் _ 8
நந்தி
மாகாளர்
பிருங்கி
கணபதி
இடபம்
கந்தர்
பார்வதி
சண்டர் என்னும் சிவகணத் தலைவராவர்.
			 
			
			- 
				கண்டம் _ 9
பூமியின் ஒன்பது கண்டங்களாவன 
கீழ் விதேகம்
மேல் விதேகம்
வட விதேகம்
தென் விதேகம்
வடவிரேபதம்
தென் விரேபதம்
வட பரதம்
தென் பரதம்
மத்திய கண்டம்
			 
			
			- 
				கதி _ 4 :
நால் வகைப் பிறப்பான
தேவகதி
மக்கள் கதி
விலங்கு கதி
நரக கதி
			 
			
			- 
				கரணம் _ 3
மனம்
வாக்கு
காயம் (உடல்)
			 
			
			- 
				கரணம் _ 4
மனம்
புத்தி
சித்தம்
அகங்காரம்
			 
			
			- 
				கரும பூமிக்குரிய தொழில் _ 6
உழவு
கைத் தொழில்
வரைவு
வாணிகம்
விச்சை
சிற்பம்
			 
			
			- 
				கருமேந்திரியம் _ 5
வாக்கு
பாதம்
பாணி (கை)
பாயுரு (மலவாய்)
உபத்தம் (சிறுநீர் கழித்தல்)
			 
			
			- 
				கலை _ 64
எழுத்தியல்பு
எழுதும் ஞானம்
கணிதம்
வேதம்
இதிகாசம், புராணம்
வியாகரணம் (இலக்கணம்)
வான நூல்
அற நூல்
நீதி நூல்
யோகம்
மந்திரம்
சகுன சாத்திரம்
சிற்பம்
மருத்துவம்
உடல் லட்சணம்
ஒலிக்குறி நூல்
காப்பியம்
அணியிலக்கணம்
சொல் வன்மை
கூத்து நாடகம்
நடனம்
வீணை
புல்லாங்குழல்
மிருதங்கம்
தாளம்
அத்திரத் தேர்ச்சி
பொன் மாற்று
இரதம் செலுத்துதல்
யானை யேற்றம்
குதிரையேற்றம்
ரத்தின ஆய்வு
பூமி ஆய்வு
போர் முறை
மற்போர்
அழைப்பு வகை
உச்சாடணம்
பகை மூட்டல்
மதன சாத்திரம்
மோகனம்
வசியம்
இரச வாதம்
காந்தர்வ வாதம்
விலங்கு மொழியறிவு
துக்கத்தை இன்பமாக்கல்
நாடி நூல்
மந்திரத்தால் நஞ்சகற்றல்
சோதிடத்தால் இழப்புக் கூறல்
சோதிடத்தால் மறைந்தன கூறல்
ஆகாயப் பிரவேசம்
வானில் உலவுதல்
கூடு விட்டுப் கூடு பாய்தல்
தன்னை மறத்தல்
இந்திர சாலம்
மகேந்திர சாலம்
நெருப்பைக் காட்டல்
நீர் மேல் நடத்தல்
காற்று பிடித்தல்
கண் கட்டல்
வாயைக் கட்டல்
இந்திரியக் கட்டல்
மறைந்ததைக் கண்டு பிடிக்க முடியாதபடி செய்தல்
கட்க ஸ்தம்பம்
ஆன்மாவை அடக்கல்
கீதம்
			 
			
			- 
				கவி _ 4
ஆசுகவி
மதுர கவி
சித்திர கவி
வித்தார கவி
			 
			
			- 
				கன்னியர் _ 7
அகலிகை
சீதை
திரெளபதி
தாரை
மண்டோதரி
நளாயினி
அருந்ததி
			 
			
			- 
				காரணம் _ 3
முதற் காரணம்
துணைக் காரணம்
நிமித்த காரணம்
			 
			
			- 
				காவிய குணம் :   
செய்யுட் குணம் _ 10
செறிவு
தெளிவு
சமநிலை
இன்பம்
ஒழுகிசை
உதாரம்
உய்த்தலின் பொருண்மை
காந்தம்
வலி
சமாதி
			 
			
			- 
				கிரகசமித்து _ 9
எருக்கு
முருக்கு
கருங்காலி
நாயுருவி
அரசு
அத்தி
வன்னி
அறுகு
தருப்பை
			 
			
			- 
				கிரகதான்யம் _ 9
கோதுமை
பச்சரிசி
துவரை
பச்சைப்பயறு
கடலை
மொச்சை
எள்
உளுந்து
கொள்ளு
			 
			
			- 
				கிரகம் _ 9
சூரியன்
சந்திரன்
அங்காரகன்
புதன்
குரு
சுக்கிரன்
சனி
ராகு
கேது
			 
			
			- 
				கிரிகள் _ 8
இமயம்
மந்தரம்
கயிலை
விந்தம்
நிடதம்
ஏமகூடம்
நீலம்
கந்தமாதனம்
			 
			
			- 
				குணம் _ 3
சத்துவம்
இராஜசம்
தாமசம்
			 
			
			- 
				குரவர் _ 5
அரசன்
ஆசிரியன்
தந்தை
தாய்
மூத்தோன் (தமையன்)
			 
			
			- 
				குற்றம் _ 3
காமம்
வெகுளி
மயக்கம்
			 
			
			- 
				குற்ற வகை _ 18
பசி
தாகம்
அச்சம்
சினம்
வெறுப்பு
பிரியம்
மோகம்
நீண்ட சிந்தனை
நரை
நோய்
அழிவு
வியர்வு
இளைப்பு
மதம் பிடித்தல்
இரத்தல்
அதிசயம்
பிறப்பு
உறக்கம்
			 
			
			- 
				கூலம் _ 16
நெல்
புல்
வரகு
தினை
சாமை
இறுங்கு
துவரை
கேழ்வரகு
எள்
கொள்ளு
பயறு
உளுந்து
அவரை
கடலை
மொச்சை
காராமணி
			 
			
			- 
				கூந்தல் :   
மகளிர் கூந்தல் வகை _ 5
கொண்டை
குழல்
பனிச்சை
முடி
சுருள்
			 
			
			- 
				சக்தி   :
சிவ சக்திகள் _ 9  
வாமை
சேட்டை
ரெளத்திரி
காளி
கலவிகரணி
பலவிகரணி
பலப்பிரமதனி
சர்வ பூதமனி
மனோன்மணி
			 
			
			- 
				சங்கு _ 4
இடம்புரி
வலம்புரி
சலஞ்சலம்
பாஞ்சசன்னியம்
			 
			
			- 
				சந்தான குரவர் _ 4
மெய்கண்ட தேவர்
அருள் நந்தி சிவாசாரியார்
மறைஞான சம்பந்தர்
உமாபதி சிவாசாரியார்
			 
			
			- 
				சபை _ 5
நடராசப் பெருமான் திருநடனம் புரியும் பஞ்ச சபைகள்.
திருவாலங்காடு _ இரத்தின சபை
தில்லை _ பொற் சபை
மதுரை _ வெள்ளி சபை
திரு நெல்வேலி _ தாமிர சபை
திருக்குற்றாலம் _ சித்திர சபை
			 
			
			- 
				சமயக் குரவர் _ 4   
சைவ சமயக் குரவர்  
திருஞான சம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தர மூர்த்தி சுவாமிகள்
மாணிக்க வாசகர்
			 
			
			- 
				சமயம் _ 6
காணாபத்தியம் _ கணபதி வழிபாடு
கெளமாரம் _ முருகன் வழிபாடு
செளரம் _ சூரிய வழிபாடு
சைவம் _ சிவ வழிபாடு
சாக்தம் _ சக்தி வழிபாடு
வைணவம் _ திருமால் வழிபாடு
			 
			
			- 
				சமித்து _ 12
வேள்விகளில் பயன் படுத்தப்படும் சுள்ளிகளைத் தரும் மரங்கள்  
வில்வம்
ஆல்
வன்னி
கருங்காலி
மா
முருக்கம்
அத்தி
பலாசு
சந்தனம்
வேங்கை
அரசு
வாகை
			 
			
			- 
				சித்தர் _ 18
நந்தீசர்
போகர்
திருமூலர்
பதஞ்சலி
தன்வந்திரி
கரூர் சித்தர்
சுந்தரானந்தர்
மச்ச முனிவர்
சட்ட முனிவர்
கமல முனிவர்
வான்மீகர்
குதம்பைச் சித்தர்
பாம்பாட்டி சித்தர்
இடைக்காட்டுச் சித்தர்
கோரக்கர்
கொங்கணவர்
கும்ப முனிவர்
			 
			
			- 
				சித்தி _ 8
அணிமா
மகிமா
கரிமா
லகிமா
பிராத்தி
பிராகாமியம்
ஈசத்துவம்
வசித்துவம்
			 
			
			- 
				சிரஞ்சீவியர் _ 7:
நீடூழி காலம் வாழ வரம் பெற்றவர்கள்
அசுவத் தாமன்
மாவலி சக்கரவர்த்தி
மார்க்கண்டன்
வியாசன்
அனுமான்
வீடணன்
பரசுராமன்
			 
			
			- 
				சிறு காப்பியங்கள் _ 5
நீல கேசி
சூளாமணி
யசோதர காவியம்
உதயண குமாரகாவியம்
நாக குமாரகாவியம்
			 
			
			- 
				சிறு பஞ்சமூலம் _ 5
கண்டங்கத்திரி
சிறு மல்லிகை
பெரு மல்லிகை
சிறு வழுதுணை
சிறு நெருஞ்சி
			 
			
			- 
				சிறு பொழுது _ 6
விடியல்
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
இடையாமம்
			 
			
			- 
				சுடர் _ 3
சூரியன்
சந்திரன்
அக்கினி
			 
			
			- 
				சுரம் _ 7
சட்ஜம்
ரிடபம்
காந்தாரம்
மத்திமம்
பஞ்சமம்
தைவதம்
நிஷாதம்
			 
			
			- 
				சுத்தி _ 5
ஆன்ம சுத்தி
தான சுத்தி
திரவிய சுத்தி
மந்திர சுத்தி
இலிங்க சுத்தி
			 
			
			- 
				சுவை _ 6
நாவால் உணரும் சுவை
கைப்பு
இனிப்பு
புளிப்பு
துவர்ப்பு
உவர்ப்பு
கார்ப்பு
			 
			
			- 
				சுவை _ 8
மெய்ப்பாட்டின் வகையுணரும் சுவை
நகை
அழுகை
இளிவரல்
மருட்கை
அச்சம்
பெருமிதம்
வெகுளி
உவகை
			 
			
			- 
				சுவை _ 9
இன்பம்
நகை
கருணை
கோபம்
வீரம்
பயம்
அருவருப்பு
அற்புதம்
சாந்தம்
			 
			
			- 
				சூரியனின் குதிரைகள் _ 7
காயத்திரி
திருட்டுபு
செகதி
அனுட்டுபு
பந்தி
பிரகதி
முட்டிணுகு
			 
			
			- 
				செல்வப் பேறுகள் _ 8
தனம்
தான்யம்
அரசு
பசு
புத்திரர்
தைரியம்
வாகனம்
சுற்றம்
			 
			
			- 
				சொல் _ 4
பெயர்ச் சொல்
வினைச் சொல்
இடைச் சொல்
உரிச் சொல்
			 
			
			- 
				ஞான வேள்வி _ 5
ஓதுதல்
ஓதுவித்தல்
கேட்டல்
கேட்பித்தல்
சிந்தித்தல்
			 
			
			- 
				ஞான வகை _ 4
கேட்டல்
சிந்தித்தல்
தெளிதல்
நிட்டை கூடுதல்
			 
			
			- 
				தத்துவம் _ 36
பூதம் _ நிலம், நீர், நெருப்பு, காற்று, வான். : 5
ஞானேந்திரியம் _ மெய், வாய், கண், மூக்கு, செவி :5
கன்மேந்திரியம் _ நா,கை,கால்,மலவாய்,குறி : 5
தன் மாத்திரை _ சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் : 5
அந்தக் கரணம் _ மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் : 4
			 
			
			- 
				வித்தியா தத்துவம் _ 7
காலம்
நியதி
கலை
வித்தை
அராகம்
புருடன்
மாயை
			 
			
			- 
				சிவ தத்தவம் _ 5
சுத்த வித்தை
ஈசுவரம்
சாதாக்கியம்
விந்து
நாதம்
			 
			
			- 
				
தருக்கள் _ 5
அரிசந்தனம்
கற்பகத் தரு
சந்தனம்
பாரிசாதம்
மந்தாரம்
			 
			
			- 
				தாதுக்கள் _ 7
இரசம்
இரத்தம்
சுக்கிலம்
மூளை
தசை
எலும்பு
தோல்
			 
			
			- 
				தாயர் _ 5
பாராட்டும் தாய்
ஊட்டும் தாய்
பாலூட்டும் தாய்
கைத்தாய்
செவிலித் தாய்
			 
			
			- 
				தாளம் _ 9
அரிதாளம்
அருமதாளம்
சமதாளம்
செயதாளம்
சித்திர தாளம்
துருவ தாளம்
நிவர்த்த தாளம்
படிம தாளம்
விட தாளம்
			 
			
			- 
				தாளம் _ 7
துருவம்
மட்டியம்
ரூபகம்
சம்பை
திரிபுடை
ஹடதாளம்
ஏகதாளம்
			 
			
			- 
				தானம் _ 10
உப்பு
எள்
நெய்
நெல்
பசு
பூமி
பொன்
ஆடை
வெள்ளி
வெல்லம்
			 
			
			- 
				தானியம் _ 9
உழுந்து
நெல்
எள்
கடலை
கொள்ளு
அவரை
கோதுமை
துவரை
பயறு
			 
			
			- 
				தானை _ 6
மூலப்படை
கூலிப்படை
நாட்டுப்படை
காட்டுப்படை
துணைப்படை
பகைப்படை
			 
			
			- 
				தானை _ 6
வேற்படை
வாட்படை
விற்படை
தேர்ப்படை
குதிரைப்படை
யானைப்படை
			 
			
			- 
				திக்கு பாலகர் யானை _ 8
கிழக்கு இந்திரன் ஐராவரம்
தென் கிழக்கு அக்கினி புண்டரீகம்
தெற்கு இயமன் வாமனம்
தென்மேற்கு நிருதி குமுதம்
மேற்கு வருணன் அஞ்சனம்
வடமேற்கு வாயு புட்பதந்தம்
வடக்கு குபேரன் சாருவபூமம்
வட கிழக்கு ஈசானன் சுப்ரதீபம்
			 
			
			- 
				திணைகள் _ 5
குறிஞ்சி
முல்லை
நெய்தல்
மருதம்
பாலை
			 
			
			- 
				திதி _ 15
பிரதமை
துதிகை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சத்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
துவாதசி
திரியோதசி
சதுர்த்தசி
அமாவாசை (அ) பெளர்ணமி.
			 
			
			- 
				திரவியம் _ 5
ஏலம்
லவங்கம்
அதிமதுரம்
கோஷ்டம்
சண்பகமொட்டு
			 
			
			- 
				திருமகள் இருப்பிடம் _ 5
தாமரை மலர்
யானையின் மத்தகம்
பசுவின் பின்புறம்
வில்வம்
கற்பரசியின் நேர் வகிட்டின் முன்புறம் முதலாவன.
			 
			
			- 
				திருமாலாயுதம் _ 5
சங்கு
சக்கரம்
தண்டு
வாள்
வில்
			 
			
			- 
				திருமுறை யாசிரியர் _ 27
சைவத் திருமுறை 12- ஐ அருளிச் செய்தவர்கள்
திருஞான சம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தர மூர்த்தி சுவாமிகள்
மாணிக்க வாசகர்
திருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த் தேவர்
பூந்துருத்தி நம்பிகள்
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலிய முதனார்
புருஷோத்தம நம்பி
சேதிராயர்
திருமூலர்
திருவாலவாயுடையார்
காரைக்காலம்மையார்
ஐயடிகள் காடவர்கோன்
சேரமான் பெருமாள் நாயனார்
நக்கீர தேவ நாயனார்
XXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXX
இளம் பெருமான் அடிகள்
அதிரா அடிகள்
பட்டினத்துப்பிள்ளையார்
நம்பியாண்டார் நம்பிகள்
சேக்கிழார் சுவாமிகள்
(மு:கு : இலக்கம் 20 - 22 வரையிலான பெயர்கள் பதியப்படாததின் காரணமாக XXXXX அடையாளமிடப்பட்டுள்ளது)
			 
			
			- 
				திருப்பாற்கடலில் அமுதம் கடைந்த போது தோன்றியவர்கள் _ 9
சந்திரன்
தன் வந்திரி மருந்து கலசத்துடன்
ஜ்யேஷ்டா தேவி
உச்சை சிரவஸ் என்ற குதிரை
லட்சுமி
அப்சரஸ் பெண்கள்
ஐராவதம்
நல் முத்துக்கள்
சிந்தாமணி முதலானவை
			 
			
			- 
				தீட்சை _ 3
ஞான போதனை சமய தீட்சை
விசேட தீட்சை
நிர்வாண தீட்சை
			 
			
			- 
				தீட்சை _ 7
பரிச தீட்சை _ அன்புடன் சீடனைத் தொடுவது
நயன தீட்சை _ சீடனை அருட் பார்வையால் நோக்குவது
மானச தீட்சை _ குரு தன் மனத்தால் சீடனைத் தன் வயப்படுத்துவது
வாசக தீட்சை _ உபதேசம் செய்வது
மந்திர தீட்சை _ மந்திரோபதேசம் செய்வது
யோக தீட்சை _ யோக முறை கற்பிப்பது
ஒளத்திரி தீட்சை _ ஹோமாக்கினி கொண்டு தூய்மை செய்வது.
			 
			
			- 
				தீர்த்தம் _ 9
கங்கை
யமுனை
சரஸ்வதி
நருமதை
சிந்து
காவேரி
கோதாவரி
துங்கபத்திரை
சோணையாறு
			 
			
			- 
				தீர்த்தம் _ 9
கங்கை
யமுனை
கோதாவரி
நருமதை
சரஸ்வதி
காவிரி
குமரி
பாலாறு
சரயு
			 
			
			- 
				தீமைகள் _ 8
விட்டில்
கிளி
யானை
வேற்றரசு
தன்னரசு
இழப்பு
பெரும் வெயில்
காற்று
			 
			
			- 
				தீவு _ 7
நாவல்
இறலி
குசை
கிரவுஞ்சம்
புட்கரம்
தெங்கு
கமுகு
			 
			
			- 
				துரியோதனாதியர் _ 100
துரியோதனன்
யுயுத்சு
துச்சாதனன்
துச்சகன்
துச்சலன்
துர்முகன்
விளிஞ்சதி
விகர்ணன்
சலசந்தன்
சுலோசனன்
விந்தன்
அதுவிந்தன்
தூர்த்தருஷன்
சுவாகு
துர்ப்பிரதருஷணன்
துர்மருஷ்ணன்
துருமுகன்
துர்க்கருணன்
கர்ணன்
சித்திரன்
உபசித்திரன்
சித்திராக்கன்
சாரு
சித்திராங்கன்
துர்மதன்
துர்பிரகாஷன்
விவித்சு
விகடன்
சமன்
ஊர்ணநாபன்
பத்மநாபன்
நந்தன்
உபநந்தன்
சேனாபதி
சுடேணன்
கண்டோதரன்
மகோதரன்
சித்திரவாகு
சித்ரவர்மா
சுலர்மா
துருவிரோசனன்
அயோவாகு
மகாவாகு
சித்திரசாயன்
சுகுண்டலன்
வீம வேகன்
வீம பாலன்
பாலகன்
வீம விக்ரமன்
உக்ராயுதன்
வீமசரன்
கனகாயு
திருஷாயுதன்
திருஷவர்மா
திருஷகத்ரன்
சோமகீர்த்தி
அநூதரன்
சராசந்தன்
திருஷசந்தன்
சத்தியகந்தன்
சகச்சிரவாகு
உக்ரசிரவா
உக்ர சேனன்
சேனானி
மகமூர்த்தி
அபராஜிதன்
பண்டிதகன்
விசாலாட்சன்
துராதரன்
திருஷகத்தன்
சுகத்தன்
வாதவேகன்
சுவர்ச்சசன்
ஆதித்திய கேது
வெகுவாதி
நாகத்தன்
அநுயாயி
நிஷல்கி
கவசி
தண்டி
தண்டதரன்
தனுக்கிரகன்
உக்கிரன்
பீமரதன்
வீரன்
வீரவாகு
அலோலுபன்
அபயன்
ரெளத்ரகம்மன்
திருஷரதன்
அநாதிருஷ்யன்
குண்டபேதன்
விராவி
தீர்க்க லோசனன்
தீர்க்கவாகு
மகாவாகு
வியுகுடாரு
கனகாங்கதன்
குண்டசித்து
சித்திரகன்.
			 
			
			- 
				துவாரம் _ 9
உடம்பிலுள்ள துவாரங்கள்
செவித்துளை -2
கண்கள் -2
மூக்குத்துளை -2
வாய்-1
குறி -1
மலவாய் -1
			 
			
			- 
				தெய்வ மணி _ 5
சிந்தாமணி
சூளாமணி
சிமந்தக மணி
சூடாமணி
கெளத்துவ மணி
 
			 
			
			- 
				தேவர் _ 33
தேவர்கள் திரட்சியைச் சாற்றுவது
ஆதித்தர் - 12
அசுவினி தேவர் - 2
உருத்திரர் -11
வசுக்கள் - 8
			 
			
			- 
				தொழில் _ 5
இறைவனின் தொழில்கள்
படைத்தல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருளல்
			 
			
			- 
				தோற்றம் _ 2
சரம்
அசரம்
			 
			
			- 
				நட்சத்திரங்கள் _ 27
அசுவினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருக சீரிஷம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி
			 
			
			- 
				நரகம் _ 7
அள்ளல்
ரெளரவம்
கும்பிபாகம்
கூடசாலம்
செந்துத் தானம்
பூதி
மாபூதி
			 
			
			- 
				நவமணிகள் _ 9
மாணிக்கம்
முத்து
வைரம்
கோமேதகம்
வைடூரியம்
மரகதம்
பவளம்
நீலம்
புஷ்பராகம்
			 
			
			- 
				நவ பாடாணம் _ 9
சாதிலிங்கம்
மனோசிலை
காந்தம்
அரிதாரம்
கந்தகம்
ரசகருப்பூரம்
வெள்ளைப் பாடாணம் (வெடியுப்பு)
தொட்டிப் பாஷாணம்
கெளரி பாஷாணம்
			 
			
			- 
				நாகங்கள் _ 9
அனந்தன்
ஆதிசேடன்
கார்க்கோடகன்
குளிகன்
சங்கபாலன்
தட்சன்
பதுமன்
மகாபதுமன்
வாசுகி
			 
			
			- 
				நாடி _ 3
வாதம்
பித்தம்
சிலேட்டுமம்
			 
			
			- 
				நாடிகள் _ 10
அத்தி
அலம் புடை
இடை
காந்தாரி
குரு
சங்கினி
சிங்குவை
சுழுமுனை
பிங்கலை
புருடன்
			 
			
			- 
				நாற்பொன் _ 4
ஆடகம்
கிளிச்சிறை
சாதரூபம்
சாம்பூநதம்
			 
			
			- 
				நிதி _ 9
கச்சப நிதி
கற்ப நிதி
சங்க நிதி
பதும நிதி
நந்த நிதி
நீல நிதி
மகா நிதி
மகாபதும நிதி
முகுந்த நிதி
			 
			
			- 
				
நூற்பயன் _ 4
அறம்
பொருள்
இன்பம்
வீடு
			 
			
			- 
				பஞ்ச சீலம் _ 5
ஐவகை ஒழுக்கம் :
கொல்லாமை
களவு செய்யாமை
காமவெறியின்மை
பொய்யாமை
கள்ளுண்ணாமை
			 
			
			- 
				பஞ்ச திராவிடம் _ 5
தமிழ் நாடு
ஆந்திரம்
கன்னடம்
கேரளம்
மராட்டியம்
			 
			
			- 
				பஞ்ச பூதம் _ 5
நிலம்
நீர்
நெருப்பு
ஆகாயம்
காற்று
			 
			
			- 
				பஞ்ச மூலம் _ 5
செவ்வியம்
சித்திர மூலம்
கண்டு பரங்கி
பேரரத்தை
சுக்கு
			 
			
			- 
				பஞ்சவாசம் _ 5
இலவங்கம்
ஏலம்
கருப்பூரம்
சாதிக்காய்
சுக்கு
			 
			
			- 
				பஞ்சமா பாதகம் _ 5
பொய்
கொலை
களவு
கள்ளுண்ணல்
குரு நிந்தை
			 
			
			- 
				பஞ்ச கோசம் _ 5
ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகை உறைகள் :
அன்னமய கோசம்
ஆனந்த மய கோசம்
பிராணயமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞானமய கோசம்
			 
			
			- 
				பஞ்ச சயனம் _ 5
சயனத்திற்குரிய படுக்கை வகை:
இலவம் பஞ்சு
பூ
கோரை
மயிர்
அன்னத்தூவி
			 
			
			- 
				பஞ்ச பட்சி _ 5
குறியறிதற்கு உரியனவும் : அ,இ,உ,எ,ஒ என்னும் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான:
வல்லூறு
மயில்
ஆந்தை
காகம்
கோழி
			 
			
			- 
				பஞ்ச பல்லவம் _ 5
பூசைக்குரிய ஐந்து தளிர்கள்:
ஆத்தி
மா
முட்கிளுவை
முல்லை
வில்வம்
 
			 
			
			- 
				பண் வகை :
பகற் பண்கள் _ 11
புற நீர்மை 
காந் தாரம் 
பியந்தைக் காந்தாரம் 
கெளசிகம்
இந்தளம் 
தக்கேசி
பழம் பஞ்சுரம்
சாதாரி 
நட்ட பாடை 
நட்ட ராகம் 
காந்தார பஞ்சமம்.
			 
			
			- 
				இராப் பண்கள் _ 9
தக்கராகம்
பழந்தக்க ராகம்
சீகா மரம்
கொல்லி
கொல்லிக் கெளவாணம்
வியாழக் குறிஞ்சி
மேராகக் குறிஞ்சி
அந்தாளிக் குறிஞ்சி
குறிஞ்சி
			 
			
			- 
				பொதுப் பண்கள் _ 3
செவ்வழி
செந்துருத்தி
தாண்டகம்
			 
			
			- 
				பதில் கூறுதல் _ 8
பதிலுரையாக உரைக்கப்படும் வகைகள்
சுட்டு விடை
மறை விடை
நேர் விடை
ஏவல் விடை
வினா விடை
உற்றதுரைத்தல்
உறுவது கூறல்
இன மொழி கூறல்
			 
			
			- 
				பதினெண் கீழ் கணக்கு _ 18
தமிழ் நூல்கள் _ 18  :
நாலடியார்
நான் மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணை மொழி ஐம்பது
திணை மாலை நூற்றைம்பது
திருக்குறள்
திரிகடுகம்
ஆசாரக் கோவை
பழ மொழி
சிறு பஞ்ச மூலம்
முதுமொழிக் காஞ்சி
ஏலாதி
கைந்நிலை
			 
			
			- 
				பதினெண் மொழிகள் _ 18
அங்கம்
அருணம்
கலிங்கம்
காம்போசம்
கொங்கணம்
கோசலம்
கெளசிகம்
சாவகம்
சிங்களம்
சீனம்
சிந்து
சோனகம்
திராவிடம்
துளுவம்
பப்பரம்
மகதம்
மராடம்
வங்கம்
			 
			
			- 
				பத்திச் செயல் _ 8
தொண்டர் அடி தொழுதல்
பூசை மகிழ்ச்சி
அர்ச்சனை
இறை தொண்டு
இறை சரிதம்(புகழ்)கேட்டல்
உடல் புளகம் உறுதல்
இறை புகழ் சிந்தித்தல்
திருப்பணி செய்தல்
			 
			
			- 
				பத்துக் குற்றம் _ 10
நூலில் காணப்படும் குற்றங்கள்
குன்றக் கூறல்
மிகைப் படக்கூறல்
கூறியது கூறல்
மாறு கொள்ளக் கூறல்
வழுஉச் சொல் புணர்த்தல்
மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல்
மற்றொன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுத்தல்
நின்று பயனின்மை
			 
			
			- 
				பத்துப் பாட்டு _ 10
தமிழிலக்கிய நூல்கள் :
திருமுருகாற்றுப் படை
பொருநராற்றுப்படை
சிறுபாணற்றுப்படை
பெரும் பாணாற்றுப் படை
முல்லைப்பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல் வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப் பாலை
மலைமடு கடாம்
பரிசம் _ 8
			 
			
			- 
				
தொடுகின்ற முறைகள் :
தட்டல்
பற்றல்
தடவல்
தீண்டல்
குத்தல்
வெட்டல்
கட்டல்
ஊன்றல்
			 
			
			- 
				பருவம் _ 6
கார்
கூதிர்
முன்பனி
பின்பனி
இளவேனில்
முதுவேனில்
			 
			
			- 
				பாவகை _ 4
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
			 
			
			- 
				பாவினம் _ 3
தாழிசை
துறை
விருத்தம்
			 
			
			- 
				பிறப்பு _ 7
தேவர்
மனிதர்
விலங்கு
பறவை
ஊர்வன
நீர் வாழ்வன
தாவரம்
			 
			
			- 
				புட்பம் _ 8
பூசைக்குரிய மலர்கள் :
புன்னை
வெள்ளெருக்கு
சண்பகம்
நந்தியாவட்டம்
குவளை (நீலோற்பலம்)
பாதிரி
அலரி
செந்தாமரை
			 
			
			- 
				புண்ணியச் செயல் _ 9
எதிர் கொண்டு அழைத்தல்
பணிதல்
உட்காரச்செய்தல்
கால்கழுவல்
அருச்சித்தல்
நறும்புகை காட்டல்
விளக்குக் காட்டல்
அறுசுவையுணவு படைத்தல்
புகழ்தல்
			 
			
			- 
				புண்ணியம் _ 4
தானம்
கல்வி
தவம்
ஒழுக்கம்
			 
			
			- 
				புராணம் _ 18
1) சிவபுராணங்கள் _ 10
சைவ புராணம்
இலிங்க புராணம்
கந்த புராணம்
கூர்ம புராணம்
வாமன புராணம்
வராக புராணம்
பெளஷக புராணம்
மச்ச புராணம்
மார்க்கண்டேய புராணம்
பிரமாண்ட புராணம்
2) விஷ்ணு புராணங்கள் _ 4
நாரதீய புராணம்
பாகவத புராணம்
காருட புராணம்
வைணவ புராணம்
3) பிரம புராணங்கள் _ 2
பிரம புராணம்
பதும புராணம்
4) சூரிய புராணம் _ 1
பிரம கைவர்த்த புராணம்
5) அக்கினி புராணம் _ 1
ஆக்கினேய புராணம்
			 
			
			- 
				பூ
மலர்வகைகள் _ 4
கோடிப்பூ
கோட்டுப்பூ
நீர்ப்பூ
நிலப்பூ
			 
			
			- 
				பெண்டிதர் பருவம் _ 7
பேதை 5-7 வயது
பெதும்பை 8-11 வயது
மங்கை 12-13 வயது
மடந்தை 14 - 19 வயது
அரிவை 20 - 25 வயது
தெரிவை 26 _ 31 வயது
பேரிளம் பெண் 32 _ 40 வயது
			 
			
			- 
				பெண்டிதர் வகை _ 4
பதுமினி
சித்தினி
சங்கினி
அத்தினி
			 
			
			- 
				பெண்பாற் பிள்ளைத் தமிழ் தமிழ்ப் பருவம் _ 10   
காப்பு
செங்கீரை
தாலப்பருவம்
சப்பாணி
முத்தம்
வாரானை
அம்புலி
கழங்கு
அம்மானை
ஊஞ்சல்
			 
			
			- 
				பேறுகள் _ 16   
புகழ்
கல்வி
வலிமை
வெற்றி
நன் மக்கள்
பொன்
நெல்
நல்லூழ்
நுகர்ச்சி
அறிவு
அழகு
பெருமை
இளமை
துணிவு
நோயின்மை
நீடாயுள்
			 
			
			- 
				பொருள் _ 4
அறம்
பொருள்
இன்பம்
வீடு (முத்திப் பேறு)
			 
			
			- 
				போகம் _ 8
அணிகலன்
ஆடை
தாம்பூலம்
பரிமளம்
சங்கீதம்
பூப்படுக்கை
பெண்
உணவு
			 
			
			- 
				மங்கலம் _ 8
சாமரம்
நிறைகுடம்
கண்ணாடி
தோட்டி
முரசு
விளக்கு
கொடி
இணைக்கயல்
			 
			
			- 
				மண்டலங்கள் _ 7
சூரிய மண்டலம்
சந்திர மண்டலம்
வாயு மண்டலம்
வருண மண்டலம்
நட்சத்திர மண்டலம்
அக்கினி மண்டலம்
திரிசங்கு மண்டலம்
			 
			
			- 
				மணப் பொருத்தம் _ 10
கலியாணப் பொருத்தங்கள் பத்து
தினப் பொருத்தம்
கணப் பொருத்தம்
மகேந்திரப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
கோனிப் பொருத்தம்
ராசிப் பொருத்தம்
ராசியதிபதி பொருத்தம்
வசியப் பொருத்தம்
ரச்சுப் பொருத்தம்
வேதைப் பொருத்தம்
			 
			
			- 
				மணம் _ 8
திருமண வகைகள்
பிரமமணம்
பிரசாபத்தியி மணம்
ஆரிட மணம்
தெய்வ மணம்
காந்தருவ மணம்
ஆசுர மணம்
இராக்கத மணம்
பைசாச மணம்
			 
			
			- 
				மலம் _ 5
ஆணவம்
கன்மம்
மாயை
மாயேயம்
திரோதானம் (மறைப் பற்றல்)
			 
			
			- 
				மாயை _ 5
தமம்
மாயை
மோகம்
அவித்தை
அநிருதம்
			 
			
			- 
				மார்க்கம் _ 4
சரியை
கிரியை
யோகம்
ஞானம்
			 
			
			- 
				மாலை வகை _ 8
போர்க்குரிய மாலைகள்
வெட்சி
கரந்தை
வஞ்சி
காஞ்சி
நொச்சி
உழிஞை
தும்பை
வாகை
			 
			
			- 
				முத்தமிழ்
 இயல்
இசை
நாடகம்
			 
			
			- 
				முத்தி நிலை _ 4
சாலோகம்
சாமீபம்
சாரூபம்
சாயுச்சம்
			 
			
			- 
				முத்தீ 
ஆகவனீயம்
தட்சிணாக்கினி
காரும பத்தியம்
அல்லது  
வயிற்றுத் தீ
காமத் தீ
சினத் தீ
			 
			
			- 
				முத்துப் பிறக்குமிடம் _ 20
யானை
பன்றி மருப்பு
சிப்பி
பாக்குமரம்
வாழை
நந்து
சங்கு
மீன் தலை
கொக்கு
தாமரை
பெண்ணின் கழுத்து
நெல்
மூங்கில்
கரும்பு
பசுவின் பல்
பாம்பு
மேகம்
இந்து (சந்திரன்)
உடும்பு
முதலை
			 
			
			- 
				முப்பழம்   
மா
பலா
வாழை
			 
			
			- 
				முப்பால்
திருக்குறளில் விரித்துக் கூறப்படும் பால்
அறம்
பொருள்
இன்பம்
			 
			
			- 
				முரசு _ 3
மண முரசு
வெற்றி முரசு
கொடை முரசு
மற்றும்..
நியாய முரசு
வீர முரசு
தியாக முரசு
			 
			
			- 
				மும்மலம்   
ஆணவம்
கன்மம்
மாயை
			 
			
			- 
				மும்மதம்
யானையின் கன்ன மதம்
கைம் மதம்
கோசமதம்
			 
			
			- 
				மேகம் _ 9
ஆவர்த்தம்
சம்வர்த்தம்
புட்கலம்
துரோணம்
காளம்
நீலம்
வாருணம்
வாயுவம்
தமம்
			 
			
			- 
				மேகம் _ 7
சம்வர்த்தம் - மணி பொழிதல்
ஆவர்த்தம் - நீர் பொழிதல்
துரோணம் - பொன் பொழிதல்
புட்கலாவர்த்தம் - பூ பொழிதல்
காளமுகி - மண் பொழிதல்
சங்காரித்தம் - கல் பொழிதல்
நீல வருணம் - தீ பொழிதல்
			 
			
			- 
				யாழ் _ 4
பேரியாழ்
மகர யாழ்
சகோட யாழ்
செங்கோட்டு யாழ்
			 
			
			- 
				யுகம் _ 4
கிரேதாயுகம் - 17,28,000 ஆண்டு
திரேதாயுகம் - 12,96,000 ஆண்டு
துவாபரயுகம் - 8,64,000 ஆண்டு
கலியுகம் - 4,32,000 ஆண்டு
			 
			
			- 
				யோகம் _ 8
இயமம்
நியமம்
ஆசனம்
பிராணா யாமம்
பிரத்யாகாரம்
தாரணை
தியானம்
சமாதி
			 
			
			- 
				யோனி பேதம் _ 84 நூறாயிரம்
ஊர்வன -11
மானுடம் - 9
நீர் வாழ்வன - 10
பறப்பன _ 10
நடப்பன _ 10
தேவர் _ 14
தாவரம் _ 20 ஆக 84 நூறாயிரம்.
			 
			
			- 
				வசுக்கள் _ 8
அனலன்
அனிலன்
ஆபத்சைவன்
சோமன்
தரன்
துருவன்
பிரத்தியூசன்
பிரபாசன்
			 
			
			- 
				வண்டு வகை _ 4
சுரும்பு
தேன்
ஞிமிறு
வண்டு
			 
			
			- 
				வண்ணம் _ 5
செம்மை
கருமை
வெண்மை
பொன்மை
பசுமை
			 
			
			- 
				வருடம் _ 60
தமிழ் வருடங்கள் :
பிரபவ
விபவ
சுக்கில
பிரமோதூத
பிரஜோத்பத்தி
ஆங்கிரச
சிறிமுக
பவ
யுவ
தாது
ஈசுவர
வெகுதான்ய
பிரமாதி
விக்கிரம
விஷு
சித்திரபானு
சுபானு
தாரண
பார்த்திப
விய
சர்வசித்து
சர்வதாரி
விரோதி
விக்ருதி
கர
நந்தன
விஜய
ஜய
மன்மத
துன்முகி
ஏவிளம்பி
விளம்பி
விகாரி
சார்வரி
பிலவ
சுபகிருது
சோபகிருது
குரோதி
விசுவாவசு
பராபவ
பிலவங்க
கீலக
செளமிய
சாதாரண
விரோதிகிருது
பரிதாபி
பிரமாதீச
ஆனந்த
இராட்சச
நள
பிங்கள
காளயுக்தி
சித்தார்த்தி
ரெளத்திரி
துன்மதி
துந்துபி
உருத்திரோற்காரி
இரத்தாட்சி
குரோதன
அட்சய
			 
			
			- 
				வள்ளல்கள் _ 21
தலைவள்ளல் :சகரன்
xxxxxxx
நளன்
துந்துமாரி
நிருதி
செம்பியன்
விராடன்
(இலக்கம் 2 ல் பெயர் பதியப்படாதபடியால் XXXX குறியிடப்பட்டுள்ளது)
			 
			
			- 
				
இடை வள்ளல்:
அக்குரன்
சந்திமான்
அந்திமான்
சிசுபாலன்
தந்தவக்கிரன்
கன்னன்
சந்தன்
			 
			
			- 
				கடை வள்ளல் :   
பாரி
மலையமான் திருமுடிக்காரி
வல்வில் ஓரி
ஆய் அண்டிரன்
பேகன்
எழினி
நள்ளி
			 
			
			- 
				வாயுக்கள் _ 10
உடலில் நிற்கும் காற்றின் வகை :
அபானன்
உதானன்
கிரிகரன்
கூர்மன்
சமானன்
தனஞ்செயன்
தேவதத்தன்
நாகன்
பிராணன்
குரு
			 
			
			- 
				வினை _ 3
சஞ்சிதம்
பிராத்துவம்
ஆகாமியம்
மற்றும் ஊழ் வகை காண்க.
			 
			
			- 
				வீரப் பறை _ 4
முரசு
நிசானம்
துடுமை
திமுலை
			 
			
			- 
				வேதாங்கம் _ 6
 
வேதத்தின் கூறுகள் :
1.சிட்சை
2.கற்பம்
3.வியாகரணம்
4.நிருத்தம்
5.சந்தோபிசிதம்
6.சோதிடம்
			 
			
			- 
				வேதம் _ 4
 
1.இருக்கு
2.யசூர்
3.சாமம்
4.அதர்வணம்
			 
			
			- 
				வேள்வி _ 5
 
1.தேவ வேள்வி
2.பித்ரு வேள்வி
3.பூத வேள்வி
4.மனித வேள்வி
5.பிரம வேள்வி.