FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 02, 2016, 10:15:04 PM
-
கத்திரிக்காய் காரக் குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2FIMG_7566-e1449246863607.jpg&hash=fbd4b589d4971bb337cc5d7c7e49b721b298b0df)
கத்திரிக்காய் ஆறு
சின்ன வெங்காயம் 100 கிராம்
தக்காளி இரண்டு
பூண்டு பத்து பற்கள்
புளி எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள் 4 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீஸ்பூன்
மஞ்சத்தூள் 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நல்லெண்ணெய் 50 மில்லி
வெந்தயம் ½ டீ ஸ்பூன்
பெருங்காயம் 1/2 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
கடுகு தாளிக்க சிறிதளவு
எப்படி செய்வது
கத்திரிக்காயை காம்பு பகுதியை அகற்றி விட்டு பின்னர் மொத்தமாக வெட்டவும். தேங்காயை நைசாக அரைத்து வைக்கவும். புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்து வைக்கவும்.
சின்னவெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தையம், கறிவேப்பிலை முதலியவற்றை போட்டு தாளிக்கவும். அவற்றுடன் நறுக்கி வைத்த வெங்காயம், உறித்து வைத்துள்ள வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கவும், தக்காளியை போட்டு நன்றாக குழைய வதங்கிய உடன் கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும். இப்போது உப்பு, மஞ்சள் தூள் தூவி லேசாக பிறட்டவும். இப்படி செய்தால் கத்தரிக்காய் எளிதில் வெந்து விடும்.
பின்னர் மிளகாய்தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும், எண்ணெய் பிரிந்து வரும். பின்னர் கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும். பத்து நிமிடம் நன்றாக வேகவிட்ட பின்னர் அரைத்து வைத்த தேங்காயை குழம்பில் ஊற்றி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வை மிதமாக வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் மினுமினுப்போடு வரும் போது பெருங்காயத்தூள் தூவி ஸ்டவ்வினை நிறுத்தி விடவும். கத்தரிக்காய் காரக் குழம்பு தயார். சூடாக சாப்பாட்டுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.