FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 02, 2016, 10:12:22 PM

Title: ~ எலும்புக் கறி குழம்பு ~
Post by: MysteRy on March 02, 2016, 10:12:22 PM
எலும்புக் கறி குழம்பு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fdscn0375-e1449247156569.jpg&hash=40c7e4ceb518f8d4300c752ab6de0b9c333b40f1)

தேவையான பொருட்கள் :

எலும்புக் கறி(சதைப் பகுதியோடு) – முக்கால் கிலோ
தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 3
பூண்டு -15 பல்
இஞ்சி – ஒரு பெரிய துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பட்டை – 2 துண்டுகள்
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் – 2 மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டை நசுக்கி வைச்சுக்கோங்க. தக்காளி, வெங்காயத்தைப் பொடியா அரிஞ்சி வெச்சுக்கோங்க. எலும்புக் கறியை சுத்தம் செய்து வையுங்க.
பிரஷர் குக்கரில் எண்ணெய், பட்டை போட்டு தாளியுங்க. அதில வெங்காயம், நசுக்கி வெச்சிருக்கிற பூண்டு இஞ்சியைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகிற வரைக்கும் வதக்குங்க. இப்போ தக்காளியைப் போட்டு அதிலிருக்கும் சாறு வடிஞ்சி, திக்கான கலவையா வர்ற வரைக்கும் வதக்குங்க. இந்த பக்குவங்களை முறைய செய்தாதான் குழம்பு, எதிர்பார்த்த ருசியில் வரும். தக்காளி குழைஞ்சி வந்தப்புறம் கறியைப் போட்டு 2 நிமிடம் வதக்குங்க. கறி சலசலக்க ஆரம்பிச்சதும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த் தூள் போட்டு கிளருங்க. இதையெல்லாம் மிதமான தீயில செய்யணும். அடுத்து 2 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி 7 விசில் வரைக்கும் அதிகபட்ச தீயில அடுப்புல வையுங்க. 7 விசில் வந்ததும் தீயை அணைச்சுட்டு, அடுப்புலேயே குக்கரை வெச்சிருங்க. பிரஷர் முழுசும் இறங்கினதும் குக்கரை திறந்து கறிவேப்பிலைத் தூவி, கிளறினா எலும்புக் கறி சாப்பிடத் தயார்.