FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 02, 2016, 08:27:30 PM
-
இறால் வறுவல்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xlt1/v/t1.0-9/12795552_1541211979509605_2498413698198125726_n.jpg?oh=c9165dd96da91288dbd3216ed208650e&oe=575E5490)
இறால் – 15
சின்ன வெங்காயம் – 12
தக்காளி – 1
பூண்டு – 8
சோம்பு – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு – 1 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
இஞ்சி – அரை அங்குலத் துண்டு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
வெங்காயத்தை பாதி பாதியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரை அங்குலத் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இறாலை மேல்தோல் நீக்கி, நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய், இஞ்சி, சோம்பு, பூண்டு சேர்த்து வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை போட்டு அரை நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் நறுக்கின தக்காளித் துண்டங்களைப் போட்டு, மேலும் அரை நிமிடம் வதக்கவும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு எல்லாம் ஒன்று சேரும்படி நன்கு கிளறி விடவும்.
அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விட்டு இரண்டு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கிளறி விடவும். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி புளிக்கரைசலையும் சேர்க்கலாம்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை போட்டு கிளறி ஒரு நிமிடம் வேக விடவும்.
வெந்தவுடன் மிளகாய் தூள் போட்டு கிளறி விட்டு மேலும் 2 நிமிடம் வேக விடவும். முதலில் மிளகாய்த்தூளைச் சேர்த்து, பிறகு அரைத்த தேங்காய் விழுதினையும் சேர்க்கலாம். இந்த முறையில் சுவை சற்று மாறுபடும்.
நீர் எல்லாம் சுண்டி, சற்று கெட்டியான மசாலாப் போல் வெந்தவுடன் இறக்கவும்.
கறிவேப்பிலைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.