FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 01, 2016, 10:34:46 PM

Title: ~ பஜ்ஜி ~
Post by: MysteRy on March 01, 2016, 10:34:46 PM
பஜ்ஜி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fbagg-e1456406537328.jpg&hash=0b66b81359d8a132d2f75e6f6a5f8e738262bd5d)

கடலை மாவு – நூறு கிராம்
மைதா மாவு – நூறு கிராம்
அரிசி மாவு – நூறு கிராம்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி – ஒரு டீ ஸ்பூன்
சிவப்பு கலர் பவுடர் – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு டீ ஸ்பூன்
பெரிய உருளைக்கிழங்கு – ஒன்று
வாழைக்காய் – ஒன்று
கத்தரிக்காய் – ஒன்று
ரீபைன்டு ஆயில் – அரை லிட்டர்

பலவித காய்களைக் கொண்டு பஜ்ஜி தயாரிக்கலாம். எப்போது பஜ்ஜி தயாரிக்கும் போது ஒரு வகை காயை மட்டும் பயன்படுத்தாமல், பல காய்களை பயன்படுத்தினால் சாப்பிடும்போது வித்தியாசமான சுவைகள் கிடைக்கும். சலிப்பு தோன்றாது.
வாழைக்காயை நீள வாக்கில் மெல்லியத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போன்ற வற்றை மெல்லிய வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, மைதா, மிளகாய்ப் பொடி, சோடா உப்பு, கலர் பவுடர், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாய் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு வருமாறு போதிய தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி நன்றாக சூடானதும் சீவி வைத்துள்ள காய்கள் சீவல்களை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணையில் போடவும்.
இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிடவும். நன்றாக உப்பி வெந்ததும் (அழுத்தினால் அமுங்க கூடாது) வெளியில் எடுத்து அடுக்கவும்.
சுவையான பஜ்ஜி தயார். பஜ்ஜி தயாரிப்பில் மாவு தயாரிப்பு மிகவும் முக்கியமான அம்சம். பதமாக கரைக்க வேண்டும். அதேபோல் எண்ணெய்யும் புது எண்ணெய்யாக இருந்தால் பஜ்ஜியின் சுவை அதிகமாக இருக்கும்