FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 01, 2016, 10:27:52 PM
-
இட்லி பொடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fidd.jpg&hash=560d6223201f467f9891198c5dcb343a69600727)
உளுத்தம் பருப்பு – கால் கிலோ
கடலை பருப்பு – 100 கிராம்
கட்டி பெருங்காயம் – 5 கட்டி
பூண்டு – முழுதாக ஒன்று
கறிவேப்பிலை – 10 கொத்து
வரமிளகாய் – 30 எண்ணிக்கை அல்லது காரத்திற்கேற்ப
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கட்டி பெருங்காயம் போட்டு வறுத்து, அதில் கடலை பருப்பு சேர்த்து லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.
அதோடு உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
கறிவேப்பிலை சேர்த்து பருப்பு வகைகள் நன்கு சிவக்க வறுக்கவும்.
கடைசியாக இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கவும்.
நன்கு ஆறியதும் மிக்சியில் முதலில் மிளகாயும், உப்பும் சேர்த்து பொடிக்கவும். பின் பருப்பு வகைகளை சேர்த்து கொர கொரப்பாக பொடிக்கவும். சுவையான இட்லி பொடி தயார்.