FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 01, 2016, 09:50:02 PM
-
வெங்காயக்குருத்துக் கறி இலங்கை சமையல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F02%2Fht466.jpg&hash=4fc3cbf7e0be3092840de3e4a4f6545341792a29)
தேவையான பொருட்கள்:
250 கிராம் வெங்காயக்குருத்துக் கறி
குவித்து 2 மே.க. பாசிப்பருப்பு அல்லது மசூர்ப்பருப்பு
1 தே.க .உப்புத்தூள்
2-3 பல்லுப் பூடு, உரித்துத் தட்டி எடுக்கவும்
1 சு. தண்ணீர், அவியவிடுவதற்கு
2 பச்சை மிளகாய், பிளந்து வெட்டவும்.
குவித்து 1 ½ தே.க. கறித்தூள்
5-6 கருவேப்பிலை, கிழித்துப் போடவும்
3மே.க. தடித்த தேங்காய்ப்பால்
2½ மே.க.தேங்காயெண்ணெய்
¼ தே.க.கடுகு
வெங்காயத்தை நோண்டித் துப்பரவாக்கி, கழுவி, கட்டுக்கட்டாக அடுக்கி, 1செ.மீ.நீளத்தில் குருக்கே அரிந்துகொள்க.
ஒரு தாச்சியில் தேங்காயெண்ணெயைக் காயவிட்டு, கடுகு, கருவேப்பிலை என்பவற்றை தாளித்து, இதில் பச்சை மிளகாய், பூடு, என்பவற்றைப்போட்டுச் சிறிது வதக்கி, பிறகு வெங்காயக்குருத்தைப் போட்டு, இடையிடையே கிளறி, 8-10 நிமிடங்கள் வதக்கவும். வதங்கியவுடன் கறித்தூள், உப்பு என்பவற்றைப் போட்டு, தேங்காய்ப்பாலை விட்டு, வற்றவிட்டு இறக்கவும்.
வெங்காயக்குருத்து என்பது முளை ஈரவெங்காயத்துடன் குருத்துப் பருவத்தில் காணப்படுவதாகும். பம்பாய் வெங்காயம் நிலத்தின் கீழ் விளைந்து, தண்டுகள் பெருத்து, பூக்கத் தொடங்கும்போது அது வெங்காயத்தாள் என்ப்படுகிறது. இதில் நீர்ப்பற்றும் கூடுதலாக இருக்குமாதலால், சிறிது வித்தியாசமாகச் சமைத்துக்கொள்ளலாம். தாள்களை வார்ந்து, கழுவி, அடுக்கி, குறுணலாக அரிந்து, பச்சை மிளகாய், பூடு, உப்பு என்பவற்றுடன் ஒரு சட்டியில் போட்டு, மூடி, மெதுவாக் எரியும் அடுப்பின் மீது வைத்து வேகவிடவும். இதனை இடையிடையே திறந்து புரட்டிவிட்டு, தாள்களிலுள்ள நீர் சுண்டி, நன்றாக வதங்கியவுடன், கறித்தூளைப் போட்டு, தேங்காய்ப்பாலை விட்டு, வற்றவிட்டு இறக்கவும்.