FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on January 13, 2012, 02:30:54 AM
-
பெத்த கடன்
முதுமைச் சுருக்கங்கள்
விலக்க இயலா
வறுமைக்கோடுகளாய்
விளைய,
மளிகைக் கடைக்
கடனோடும்,
காய்கறிக் கடைக்
கடனோடும்,
வீதிமுனை வரை
நீண்டிருக்கும்
வட்டிக் கடைக் கடனோடும்,
அவமானத் துண்டால்
முகம் மறைத்து
வீட்டில் வரும் தந்தையிடம்
‘எங்களுக்கு என்ன செஞ்சே’
எனக்கேட்கும்
பெத்த கடன்.
-
Appadi ketkuravangaluku kadan vangiyathu visham koduthu kadana theerthadanum :D :D
-
அப்படி பார்த்தா நாட்டில முக்கால்வாசி பேருக்கு விஷம் வைக்கணும்ல ;)
-
Hmm apadiyathu makkal thogai kuraiyattum
Apadi irukuravanga uyirodu iruka vendiya avasiyamey ilai enai porutha varaikum