FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 29, 2016, 10:31:52 PM
-
உளுந்து வடை -சமையல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffarm1.static.flickr.com%2F229%2F461174498_df02b8ea5a.jpg&hash=2906945357757b693437f9d96226da94b6063275)
தேவையான பொருள்கள்:
உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
செய்முறை:
உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம்(மட்டும்) ஊறவைத்துக் கொள்ளவும்.
கிரைண்டர் அல்லது மிக்ஸியில் உளுந்தை பச்சைமிளகாய், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து, அத்துடன் தேவையான உப்பைக் கலந்துகொள்ளவும்.
மாவில் மற்ற எல்லாப் பொருள்களும் நன்றாக சீராகக் கலந்தபின் கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி லேசாக அழுத்தாமல் விரல்களால் கலந்துகொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணை காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு, மாவை வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் நன்கு சிவப்பாகும் வரை பொரித்து எடுக்கவும். (நன்கு சிவக்கப் பொரித்தெடுத்தால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.)