FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 29, 2016, 09:56:11 PM

Title: ~ பொரித்த கத்தரிக்காய்க் கறி இலங்கை சமையல் ~
Post by: MysteRy on February 29, 2016, 09:56:11 PM
பொரித்த கத்தரிக்காய்க் கறி இலங்கை சமையல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F02%2FCapture3.jpg&hash=6cbe34f540239308694dbe182fcc8f7d1c674636)

தேவையான பொருட்கள்:

350 கிராம் கத்தரிக்காய்
பொரிப்பதற்கு தேங்காயெண்ணெய்
இலந்தைப்பழமளவு பிசைந்த பழப்புளி
1 தே.க .உப்புத்தூள்
7-8 பல்லுப் பூடு, உரித்துத் பிளந்து வெட்டவும்.
குவித்து 2 தே.க.கறித்தூள்
3 பச்சை மிளகாய், பிளந்து வெட்டவும்.
1 மே.க. வெட்டிய வெங்காயம்
5-6 கருவேப்பிலை, கிழித்துப் போடவும்
3-4 மே.க. தடித்த தேங்காய்ப்பால்

கத்தரிக்காயை முதலில் கழுவி, பெருவிரல் கனத்தில், 4½-4 செ .மீ. நீளத்துண்டுகளாகச் சரித்து வெட்டி, தேங்காயெண்ணெயில் அளவளவாகப் போட்டு, சிவக்கப் பொரித்து வடிக்கவும். கூடுதலாகப் பொரிந்தால் கசக்கும். அதே எண்ணெயில் பச்சை மிளகாய், வெங்காயம், பூடு என்பவற்றையும் சிவக்கப் பொரித்து வடியவிடவும். ஒரு சட்டியில், பழப்புளியை ¼ சுண்டு தண்ணீரில் கரைத்து விட்டு, உப்பு, கறித்தூள் என்பவற்றையும் போட்டு, தேங்காய்ப்பாலையையும் விட்டுக் கலக்கி, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு, இதில் பொரித்து வைத்துள்ள கத்தரிக்காய் முதலானவற்றையும், கருவேப்பிலையையும் போட்டு, மெல்லிய நெருப்பில் சிறிது வேகவிட்டு, வற்றியவுடன் இறக்கவும். கத்தரிக்காயை மசிய விடலாகாது.