FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on January 13, 2012, 02:05:55 AM
-
பின் தொடரும் சிரிப்புகள்.
என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது
இன்னொரு சிரிப்பு.
அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.
பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.
எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.
மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.
தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்