FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on February 27, 2016, 11:09:36 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 091
Post by: Forum on February 27, 2016, 11:09:36 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.



நிழல் படம் எண் : 091
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Gabஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் வியாழக்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F091.jpg&hash=527d30dea631e7be71d3bc32c488fc832bb32895)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 091
Post by: thamilan on February 28, 2016, 08:55:07 AM
மகனே
பச்சிளங் குழந்தையாய்
நீ தடுக்கி விழுந்தபோதெல்லாம்
நடக்க முற்படுகிறாய் - என்று
நரம்பெல்லாம் குளிர்ந்து
உன்னை தூக்கிப் பிடித்தேன்

பள்ளிச் சிறுவனாக நீ
துள்ளித் திரிந்த போது
தவறி விழுந்திடக் கூடாதென
தவித்துப் போய்
தாங்கிப் பிடித்தேன்

வாலிபனாக வளர்ந்து விட்டாய்
பருவத்தின் வேகத்தில் - நீ
பாய்ந்து சென்றபோதெல்லாம்
பயந்து போய் - உன்னைத்
தடுத்துப் பிடித்தேன்

மனைவி வந்ததும்
நீ ஒதுங்கி வாழ்ந்ததை
தூரத்துப் பச்சை தான்
கண்ணுக்கு குளிர்ச்சி என
ஊருக்கு சொல்லி - உன்னை
விட்டுப் பிடித்தேன்

வருடத்துக்கு ஒருமுறை
விருந்தினராய் வந்துவிட்டு
வேலைப் பளுவென்று
கூசாமல் சொன்னபோதும்
பாசம் குறையாதவன் என
தட்டிக் கொடுத்தேன்

வயதான  காலத்தில்
நடைதளர்ந்து வலுவிழந்து
கால்தடுக்கி நான் விழுந்தபோது
"கட்டிலோடு கிடந்தால்
என்ன கேடு இந்த கிழவனுக்கு "
என் காதுபட
உன் தாயிடம் நீ கேட்ட பின் தான்
தெரிந்தது மகனே

அன்று உன் தாயுடன்
கட்டிலில் கிடக்காமல் இருந்திருந்தால்
வந்திருக்காது வம்பு  என
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 091
Post by: பவித்ரா on February 28, 2016, 02:17:37 PM

உழைத்தே  களைத்தாலும்
அதை மனதோடு வைத்து
புன்னகையோடு பிள்ளையை
வளர்க்கும் ஒவ்வொரு
தகப்பனும் புனிதனே ...

தந்தையின் அன்பை பொறுத்தவரை
நான் சுயநலவாதி தான்,
என் உடன் பிறப்புக்கும்
விட்டுத்தரமாட்டேன் ...

தாய் இல்லாத பிள்ளைகளுக்கு
தான் தெரியும் தந்தையின்
அன்பு எவ்வளவு
இனிமையானது என்று புரியும்...

விரல் பிடித்து நடக்க
 பழகியதிலிருந்து
கல்வி அறிவோடு
வாழ்க்கை பாடத்தையும்
சேர்த்தே பழக்கிவிட்டாய் ...

வன்மம் நிரந்த உலகில்
தைரியமாய்  சமுதாயத்தில்
சுயமரியாதையோடு
வாழக்கற்று கொடுத்த என் தந்தையே ...

நீ இல்லாது போனால்
எப்படி வாழ என்று கற்று
கொடுக்க மறந்து இருப்பினும்
வருகிற சவால்களை சந்தித்து
வாழ பழகிக்கொண்டேன்...

தந்தையின் முழுமையான
அன்பை பெற்ற ஒவ்வொரு மகளும்
கடவுளிடம் கேட்கும் வரம்
அடுத்த ஜென்மத்திலும்
இவருக்கே  மகளாக வேண்டும்...
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 091
Post by: SheeNa on February 28, 2016, 08:20:12 PM
என் தந்தையே
பிறந்த போதினிலே என் உச்சி முகர்ந்து
மார்போடு அணைத்த என்னை
இன்று வரை
உன் மனதினில் மகாராணியாக வைத்திருக்கும்
நீயே என் முதல் கதாநாயகன்
அன்பு என்ற வார்த்தைக்கு
அர்த்தம் நீயே
உன்னைப் போல என்னில்
அன்பு செலுத்திட எவரும் இல்லை
இவ் உலகினிலே
 
நான் எத்தனை தூரம் தொலைவில் இருந்தாலும்
எனக்கு துணையாய், பாதுகாப்பாய் இருப்பது
உன் நினைவுகளே
நான் செய்த பிழைகள் எத்தனையோ
என்றும் நீ  ஒரு
கோபப்பார்வை கூடப் பார்த்ததிலேயே 
அன்பாக அரவணைத்து தவறை திருத்துவதில்
எனக்கு ஆசான் நீயே தான்
 
நான் எது கேட்டாலும்
இல்லை என்று சொல்லாமல்
வாங்கித்த தந்தவர் நீ
நான் இப்போது கேட்பதெல்லாம்
ஒன்றே ஒன்று தான்
மறு பிறவி என்று ஒன்று உண்டென்றால் 
அத்தனை  பிறவியிலும் 
நான் தாயாகவும்
நீ எனக்கு சேயாகவும் பிறந்திட வேண்டும்
நீ தந்த அன்பையெல்லாம்
பலநூறு மடங்காக நான் உனக்கு தந்திட வேண்டும் 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 091
Post by: MyNa on February 29, 2016, 09:10:34 PM
தமிழ் தாய்க்கு வணக்கம்..

தந்தையே !!
உம் மகளின் கிறுக்கல் உமக்காக..

இங்க பாரும்மா ..
யாரு இது ..
அப்பா !! அப்பா சொல்லுங்க....

அன்று என் தாய் என் தந்தையை
எனக்கு அறிமுகம் செய்த தருணத்தில்
தொடங்கியது எங்களின் அழகிய பயணம் ..

விரல் பிடித்து நடக்க வைத்து
கரம் பிடித்து எழ வைத்து
தோள் கொடுத்து நிமிர வைத்தவர்  ..

அவரே என் ஆசான்
அவரே என் உற்ற தோழன்
அவரே நான் போற்றும் முதற்கடவுள் ..

ஒரு போதும் முகம் சுழித்ததில்லை
இல்லை என்று நான் கேட்டு மறுத்ததில்லை
என்னை அரவணைக்க தவறியதில்லை..

தந்தை !!
என் வாழ்வில் எனக்கு கிடைத்த மாபெரும் வரம்
மூச்சிருக்கும் வரை அதுவே எனக்கு தாரக மந்திரம்..

மறுபிறவி என்று ஒன்று உண்டெனில்
நான் மீண்டும் உமக்கே மகளாக
பிறக்கும் வரம் பெற வேண்டும்
தந்தையே !!

மைனா ( தமிழ் பிரியை )
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 091
Post by: PraBa on March 01, 2016, 05:48:51 PM
என்ன தவம் செய்தேன்
      உன் பிள்ளையாக பிறந்திட ......

உன்னால் எனக்கு உயிரூட்டினாய்
    உறங்க மறுத்த எனக்கு தோள் நீட்டினாய்....

என் சிறுவயது சிநேகிதனும் நீதான்!
       என் குரல் கேட்டு மகிழ்தவனும் நீதான்!
என் விரல் பிடித்து நடந்தவனும் நீதான்!
       எனக்கு வேர்கொடுத்து தலை சாய்பவனும் நீதான்!

தரை சுடுமென தூக்கி கொண்டபனும் நீதான் !
        என் தாகம்  தீர எனக்கு தந்தையாய் வந்தவனும் நீதான் !
நித்தம் நெஞ்சில் அணைத்து நெகில்தவனும் நீதான்!
         விரலோடு விரலாக விளையாடிய போதும்
விளையாட்டு பொம்மையாய் மாறியவனும் நீதான்!

நடை பயின்று நான் விழுந்த போதும்
          என் நிழலாக ஓடி வந்தவனும் நீதான்!
தொலைதூர பயணமாய் நான் இருந்த போதும்
         என்னை தொடர்கின்ற நிலவொளியாய்  இருப்பவனும் நீதான்!

  ஒரு போதும் ஒப்பிட மாட்டேன் கடவுள்முன் உன்னை
          அவனுக்கே களைத்து போகும்
                           என் கண்ணீரை துடைத்துவிட
  ஒரு போதும் களைத்ததில்லை உன் கரங்கள் இரண்டும்

மறுபிறவியில் உனக்கு மகனாய் பிறபத்தைவிட
      உன் கால்களுக்கு காலணியாய் இருத்திட வேண்டும்
என்னை தூக்கி நடந்த உன்பாதங்களை   
       ஒரு முறையாவது தூய்மைபடுத்தி செல்ல,,,,
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 091
Post by: ReeNa on March 02, 2016, 12:51:39 AM
என்  அன்புள்ள  அப்பா  !உமை போல  யாருண்டு
கருவில் உருக்கொண்ட நாள் உன் நேசம் தொடங்கியதோ.,,   
என்னை  நெஞ்சில் சுமந்தாய் தோளில் சுமந்தாய் .,,
என்னை கை பற்றி ., பூமியில் நிற்கவைக்க பலம் தந்தாய்.,,
இன்று இங்கே நான் எழுதும் நிலை தந்தாய் .,,

என்னை  பார்த்த  நாளில்  உன்னை  மறந்தீரே!
உலகத்திற்கே  புரியாத  என்  மொழியை  அறிந்தீரே! 
என்  தேவை  சந்திக்க  உன்  தேவை  மறந்தீரே! 
என் கண்ணீரை  துடைத்தே உன்  கண்ணீரை  மறைத்தீரே!
அப்பா!  அப்பா!  இது என்னாப்பா  அப்பா அப்பா  சொல்லுப்பா !
என் அர்த்தமற்ற கேள்விக்கு சலிக்காமல் பதிலளித்தீரே !

உன்  அன்பிற்கு எது ஈடு !
உன் தியாகம் நான் செல்லும் கோடு..!
என்  உறக்கம்  உன்  தொழில்  தானே!
என்  கீதம் உன்  இதயத்தின்  துடிப்பே  தானே !
என்  முதல்  ஆசாரியர்  நீ  தானே!
என் காதில் ஒலித்த முதல் சங்கீதம் நீகூறும் என் பெயர்தானே!
என்  உணவே   உன்  கை  இல்  இருந்தே  தானே! 
என்  தேவைகளை  வேர்வையால் சாதித்து தந்தவர்  நீதானே!
என்  முதல்  ரசிகனே நீதானே ! என்  வெற்றியன்  காரணம்  நீதானே!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 091
Post by: SweeTie on March 02, 2016, 07:00:05 AM
பிடித்துக் கொள்ளடா 
என் விரல்களை இறுக்கமாய்
 பயந்து  விடாதே
தடுக்கி   விழும்போது
திரும்பவும் எழுந்து நில்  .
வீழ்ந்தே கிடந்தால் தோற்றவனாவாய்..

வாழ்க்கைப் பயணத்தில்   
வழிப்போக்கர்கள் ஆயிரம் 
நல்லவர்கள் எவரும் இல்லை i 
கெட்டவர்களும் யாரும் இல்லை
உன்னை மட்டும் எடை போடு
சான்றோனாய் வாழ்த்திடுவாய்

நீதிக்குத் தலை வணங்கு
அன்புக்கு அடிமையாய் இரு
நேர்மைக்கு நிமிர்ந்து நில்
கடமையில் கண்ணாயிரு
அறிவுக்கு  திறவுகோலாகு
வாழ்க்கை வளம்பெறும்

நாளை உன் கையை
நான் பிடிக்கும்வேளை
உன் உயரம்
இன்னார் மகன் என்றில்லாமல்
இன்னார் தகப்பன்  என
உலகறிய வேண்டுமடா 
நீ என் ஆசானகவேண்டும்
நான் உன் பிள்ளையாகவேண்டும்