FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 27, 2016, 09:18:41 PM
-
பூண்டு சாதம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F09%2Fharlic-rice-e1443527602451.jpg&hash=a78b7f764b26a6c3b362d74f7483543c2f7d1745)
தேவையான பொருட்கள்:
சாதம் – 2 கப்
பூண்டு – 10 – 15 பல்
வர மிளகாய் – 2
தனியா – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – 5 இலை
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
* ஒரு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
* கடைசியில் 4 அல்லது 5 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும்.
* வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
* அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
* அதே எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
* சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும்.
* கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்