FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 26, 2016, 09:11:42 PM
-
சிக்கன் கட்லெட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fsikk.jpg&hash=0b07a44d815ccd3fd521e87772188b3284bff9db)
தேவையான பொருட்கள் :
கொத்திய சிக்கன் – அரை கிலோ
உருளைக்கிழங்கு – அரை கிலோ
உரித்த பச்சை பட்டாணி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 25 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பட்டை – ஒரு அங்குலத் துண்டு
சோம்பு – அரை தேக்கரண்டி
முட்டை – 4
ரொட்டித் தூள் – ஒரு கப்
கொத்தமல்லித் தழை – சிறிய கட்டு
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை எலும்பு நீக்கி நன்கு கொத்திக் கொள்ளவும். சிக்கன், உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியவற்றை தனித்தனியாக உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். பட்டை, சோம்பு இரண்டையும் பொடித்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித் தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
உருளைக்கிழங்கை மசித்துக் கொண்டு மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு பிசைந்து உருண்டைகளாக பிடித்து கட்லெட் வடிவில் தட்டி வைக்கவும்.
முட்டையை நன்கு அடித்துக் கொண்டு தட்டி வைத்த கட்லெட்டை முட்டையில் தோய்த்தெடுத்து ரொட்டி தூளில் புரட்டி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.