FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 26, 2016, 07:35:41 PM
-
வாட்டர் மிலன் டிரிங்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fwatermelon-juice-e1456111743955.jpg&hash=01fe3d465bdd5df2b8f5e6f0c9150ca9b56f464e)
தேவையான பொருட்கள்
தர்பூசணி – 1
சீரகத் தூள் – 1 ஸ்பூன் (வறுத்து பொடித்தது)
ப.மிளகாய் – 2
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
புதினா இலை – சிறிதளவு
ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு
கல் உப்பு – சுவைக்கு
செய்முறை:
• தர்பூசணியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
watermelon-juice
• சிறிதளவு தர்பூரணி துண்டுகள், புதினா (பொடியாக நறுக்கியது) இலைகளை தனியாக வைக்கவும்.
• மிக்சியில் நறுக்கிய தர்பூசணி, சீரகத்தூள், எலுமிச்சை சாறு, கல் உப்பு, ப.மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
• அரைத்த ஜூஸை வடிகட்டிக்கொள்ளவும்.
• ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் தர்பூசணி துண்டுகள், புதினா இலை, ஐஸ் கியூப்ஸ் போட்டு பருகவும்.
• கோடை வெயிலுக்கு இதம் தரும் இந்த தர்பூசணி பானம்