FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 25, 2016, 10:00:23 PM
-
உருளைக்கிழங்கு மோர் குழம்பு
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12715351_1539644739666329_4691098436467023583_n.jpg?oh=597dfda0aa05102b3a252536b7de428e&oe=576E84F3)
தேவையான பொருட்கள்:
தனியா - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
கடுகு - அரை தேக்கரண்டி.
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
தண்ணீர் - ¼ கப்
உருளைக்கிழங்கு - 4
மோர் அல்லது தயிர் - 1½ கோப்பை
கொத்தமல்லை தழை - சிறிதளவு
நீர் - ½ கப்
துருவிய தேங்காய் - ¼ கப்
உப்பு - சுவைக்கு
தாளிக்க :
ஆயில் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
ஓமம் - ½ தேக்கரண்டி
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
* தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடுகு, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சோர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி
கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.