FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 23, 2016, 11:31:05 PM
-
எளிமையான ஆரஞ்சு கீர்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12734140_1539569449673858_4742733194234261897_n.jpg?oh=a1109f5c43b9700bc521eab978f3c517&oe=57236B96)
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு பழம் – 3
பால் – 4 கப்
கண்டென்ஸ் மில்க் – 5 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் – 3 சொட்டு
செய்முறை :
* ஆரஞ்சு பழத்திலிருந்து சதையை மட்டும் தனியாக எடுத்து உதிர்த்து வைக்கவும்.
* பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்து பிரிட்ஜில் வைக்கவும்.
* பால் நன்றாக குளிர்ந்த பின்னர் பிரிட்ஜில் இருந்து அதை எடுத்து அதில் கன்டென்ஸ் மில்க்கை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அடுத்து அதில் ஏலக்காய்தூள், உதிர்த்து வைத்த ஆரஞ்சு சதையை சேர்த்து நன்றாக கலந்து மறுபடியும் பிரிட்ஜில் வைக்கவும்.
* கீர் நன்றாக குளிர்ந்ததும் அதை வெளியில் எடுத்து அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து பருகவும்.
* சுவையான ஆரஞ்சு கீர் ரெடி