FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 23, 2016, 11:02:55 PM
-
முட்டை சாதம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F07%2Fegg-fried-rice-recipes1.jpg&hash=b2a69c7635f143719f4cf8d5c71bbea553ed100c)
தேவையான பொருட்கள் :
அரிசி – 1 ஆழாக்கு
முட்டை – 2
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
• அரிசியை சிறிது உப்பு சேர்த்து முக்கால் வேக்காடாக வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
• வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
• ஒரு கிண்ணத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் போட்டு சில துளி தண்ணீர் ஊற்றிக் கரைத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலைப் போட்டுத் தாளிக்கவும்.
• பிறகு வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
• நன்கு வதங்கியதும் முட்டையை ஊற்றிக் கிளறவும். பாதி வெந்ததும் வடித்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு 5 நிமிடம் கிளறி இறக்கவும்.