FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 23, 2016, 10:34:19 PM
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fsakkaral-e1455952969278.jpg&hash=4c4e2818cb46326d0acab2c450279abbdb97e6e1)
புழுங்கல் அரிசி – ஒரு டம்ளர்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ
வெல்லம் – கால் கிலோ
ஏலக்காய் – 3
நெய் – 100 கிராம்
தேங்காய் – அரை மூடி
அரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் ஊற வைத்து எடுத்த அரிசியை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி அதையும் சிறு துண்டுகளாக அரிசியுடன் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வெல்லத்தை தூளாக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றி வெல்லம் கரைந்ததும் மாவில் வெல்லக்கரைசலை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
அரை மூடி தேங்காயைத் துருவி அதையும் மாவில் போடவும். ஏலக்காயைத் தூளாக்கி மாவில் போட்டு அனைத்தையும் நன்கு கலந்து, அடை மாவு பதத்திற்கு தயார் படுத்தவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறுசிறு அடைகளாக தட்டி, சுற்றி நெய் விட்டு சிறு தணலில் வேக விடவும்.
அடிப்பக்கம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு சற்று நெய் விடவும். இரண்டு பக்கமும் வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.