FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 22, 2016, 09:33:13 PM
-
மாதுளை மில்க் ஷேக்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fffff1.jpg&hash=d93d3c4d2ab1dc6df49415f98582473374a8a3e3)
மாதுளையில் வைட்டமின் சி, ஏ மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது. மேலும் ஆய்வுகள் பலவற்றில் மாதுளையை அதிகம் சாப்பிட்டால், இதய நோய், புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.
எனவே இத்தகைய மாதுளையை தினமும் சாப்பிட வேண்டும். அதிலும் அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் போன்றும் செய்து குடிக்கலாம். மேலும் இதனை காலை அல்லது மாலை வேளையில் குடிக்கலாம்.
குறிப்பாக கோடைகாலத்தில், வெயிலில் சுற்றி வீட்டிற்கு வந்ததும் மாதுளை மில்க் ஷேக் குடித்தால், இழந்த புத்துணர்வை மீண்டும் பெறலாம்.
தேவையான பொருட்கள் :
மாதுளை – 1
குளிர்ந்த பால் – 2 கப்
சர்க்கரை – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் மாதுளையை உரித்து, அதில் உள்ள விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாதுளை விதைகள், குளிர்ந்த பால், தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், அருமையான மாதுளை மில்க் ஷேக் ரெடி!!