FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 22, 2016, 09:05:29 PM
-
முள்ளங்கி பருப்பு கறி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F09%2F%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF-%25E0%25AE%25AA%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581-%25E0%25AE%2595%25E0%25AE%25B1%25E0%25AE%25BF.jpg&hash=c59a6d829b9f0c95af638e938655d48b7c1e4a5b)
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்,
கடுகு,
உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு,
சீரகம்,
பெருங்காயம்.
செய்முறை :
• பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
• முள்ளங்கியை தோலைச் எடுத்து விட்டு கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும்.
• துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
• அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
முள்ளங்கி பருப்பு கறி
• கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, முள்ளங்கிக் கலவையையும் சேர்த்துக் கிளறி, மூடிவைக்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
• ஒன்றிரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து கிளறிவிட்டு, முள்ளங்கி வெந்து நீர்வற்றியதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். (சுமார் 5, 6 நிமிடங்களிலேயே முடிந்துவிடும்.)
• நீர்சத்து நிறைந்தது முள்ளங்கி. சிறுநீர் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் முள்ளங்கியை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.