FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 21, 2016, 09:12:11 PM
-
சுட்ட கத்திரிக்காய் கூட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F03%2Fsl3126.jpg&hash=5fcdf6716f2843e664d1767fa84c86cd1eea71b8)
பெரிய கத்திரிக்காய் – 1,
பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா 50கிராம்,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
மிளகாய்த்தூள் – 2டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி, அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சுட்டெடுக்கவும். தோல் நன்றாக சுருங்கியதும் ஆற வைத்து,தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து பின், கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி புளிக்கரைசல், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாத்தூள் சேர்த்து கெட்டியாக கொதிக்க வைத்து இறக்கவும்.