FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 21, 2016, 08:11:46 PM
-
கார்ன் சீஸ் டோஸ்ட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fbun.jpg&hash=077d5a9e827c71fde3729b53c15521de765fcad1)
தேவையான பொருட்கள்:
பிரட் – 6 துண்டுகள்
வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1/2 கப்
துருவிய சீஸ் – 1/2 கப்
காய்ச்சிய பால் – 3/4 கப்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மைதா – 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் அதில் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து சில நொடிகள் கிளறி, பின் பால் ஊற்றி நன்கு சாஸ் போன்று ஓரளவு கெட்டியான பதத்தில் வரும் வரை கிளறி, பின் அதில் காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
பிறகு அதனை நன்கு கிளறி, சீஸ் சேர்த்து உருக வைக்கவும். சீஸ் உருகியதும், அடுப்பை அணைத்து விட வேண்டும். அடுத்து பிரட் துண்டுகளை நெய் தடவி தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளவும்.
இறுதியில் ஒவ்வொரு பிரட் பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்திலும், கார்ன் கலவையைப் பரப்பி பரிமாறினால், கார்ன் சீஸ் டோஸ்ட் ரெடி!!!