FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 19, 2016, 09:34:09 PM
-
மிளகாய் சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F05%2F2%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B3%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D-%25E0%25AE%259A%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF.jpg&hash=f20ca3980209f7589951a4e1a4932f6a22cb8a7c)
தேவையான பொருட்கள்:
வரமிளகாய் – 10
பூண்டு – 7 பல்
புளி – கொட்டை பாக்கு அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, குறைந்த தீயில் மிளகாயை மொறுமொறுப்பாக வறுக்கவும்.
2மிளகாய் சட்னி
வறுத்த மிளகாயை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
அதனுடன் பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து மைய அரைக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அரைத்த சட்னியுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
சுவையான, காரசாரமான மிளகாய் சட்னி தயார்.