FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on February 19, 2016, 09:19:42 PM
-
முருங்கைக்காய் சூப்
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/10405357_1538499773114159_2644152255117141618_n.jpg?oh=9de5bda05ab408378e0b0042b4949387&oe=575A3413)
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் – 5, துவரம் பருப்பு – 1 கைப்பிடி, பச்சைமிளகாய் – 1, உப்பு, மிளகு – தேவையான அளவு, ரஸ்க் – 4 துண்டுகள்.
செய்முறை:
முருங்கைக்காயைத் துண்டு துண்டாக நறுக்கி, நீரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேகவைத்த துவரம் பருப்பு, பச்சைமிளகாய், உப்பு கலந்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இந்த விழுதையும், முருங்கைக்காயின் சதைப் பகுதியையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு சூடுசெய்து, மிளகுத் தூள் தூவி இறக்க வேண்டும். இதனுடன், ரஸ்க் துண்டுகளை சூப்பில் போட்டு சாப்பிட, சுவையாக இருக்கும்.
பலன்கள்: புரதச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும், ஃபோலேட் நிறைந்துள்ளதால், கர்ப்பிணிகளுக்குச் சிறந்த ஊட்டச்சத்து உணவாக அமையும். பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் சாப்பிட வேண்டிய சூப்.